இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலர் மற்றும் பிற முக்கிய நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் விளைவாக இந்திய பொருளாதாரம் மற்றும் நாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்படலாம். குறிப்பாக இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாயப்புகள் அதிகமாகவே உள்ளது.
ரூபாயின் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சர்வதேச சந்தையில் ரூபாய் நாணயத்திற்காா தேவை குறைந்து வருவதும், உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் நாணயங்கள் அடங்கிய கூடையில் டாலர் மதிப்பு பெரிய அளவில் அதிகரிப்பதும் தான். குறிப்பாக டாலர்-ரூபாய் மற்றும் திர்ஹம்-ரூபாய் பரிமாற்று விகிதங்களில் அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தற்போது தெரிகிறது.

ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ரூபாய் மதிப்பு குறையும் போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கிறது. இது இந்திய நுகர்வோர்களின் வாங்கும் சக்தி அதாவது purchasing power கடுமையாக பாதிக்கிறது.
இதேவேளையில் பணவீக்கத்திற்கு இணையாக மக்களின் வருமானம் உயராத காரணக்தால் நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இந்த மக்கள் இந்த ரூபாய் மதிப்பின் சரிவு மூலம் ஏற்படும் விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: ஐந்து ஆண்டுகளில் ரூபாய் எங்கே நிற்கும்? தற்போதைய பொருளாதார போக்குகளை கருத்தில் கொண்டால், மேலும் மதிப்பு குறையும் என்று கணிக்கலாம். இந்தியாவின் தொடர்ச்சியான வர்த்தகக் குறைச்சொல் மற்றும் மெதுவான GDP வளர்ச்சி விகிதம் இந்த கவலைகளை அதிகரிக்கிறது.
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.38 ரூபாயாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 5 வருடத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 105 ரூபாயாக உயரலாம். இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம்.
பல பெரிய இந்திய நிறுவனங்கள், உள்நாட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும், உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் செய்ய இன்றளவும் போராடுகின்றன. இதனால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு வருமானம் மிகவும் குறைவு. இதனால் டாலர் இருப்புக்கு இந்தியா வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs), வெளிநாட்டு மூலதனத்தை மட்டுமே அதிகளவில் நம்பியிருக்கும் நிலை உள்ளது.
இதற்கிடையில் இந்தியாவில் ஏற்றுமதி செய்வதை காட்டிலும் இறக்குமதி செய்வது அதிகமாக உள்ளது, இதனால் நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கட்டாயம் அன்னிய செலவாணி மிகவும் அவசியமாக உள்ளது. இந்த டாலர் மதிப்பு அதிகரிக்கும் வேளையில், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் மந்தமடையும் போது கட்டாயம் இது பெரும் தலைவலியாக மாறிய மிடில் கிளாஸ் மக்களை வாட்டி வதைக்கும்.
More From GoodReturns

Rupee Crash! பெட்ரோல் முதல் தங்கம் வரை விலை உயரும் அபாயம்? இந்தியா என்னவாகும்?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications