கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் மதுரை பெண்..!

மதுரை: கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி, சைபர் செக்யூரிட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் 22 வயதான ஹர்ஷினி கிஷோர் சிங்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஹர்ஷினி ரூரல் டெக் ரைஸ் (Rural tech rise) என்ற நிறுவனத்தை தொடங்கி கிராமப்புற மாணவர்களுக்கு டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வுகளையும் கல்வியையும் வழங்கி வருகிறார். பகல் நேரத்தில் பல்வேறு கிராமப்புற பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வழங்கும் இவர் இரவு நேரங்களில் ஐடி ஊழியராக வேலை செய்கிறார்.

கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் மதுரை பெண்..!

16 வயதிலேயே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பரிசுப் பொருட்களை தயாரித்து வழங்கக்கூடிய தொழிலை தொடங்கியவர் தான் ஹர்ஷினி. 14 வயதிலிருந்து தான் பல்வேறு சிறு சிறு தொழில்களை முயற்சித்திருப்பதாக கூறும் இவர் கொரோனா தொற்று காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கிஃப்ட் பாக்ஸ்களை தயாரித்து வழங்கும் தொழிலை தொடங்கினார். இதுதான் அவருக்கு ஒரு தொழிலை எப்படி தொடங்க வேண்டும் எப்படி அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அறிவை வழங்கியதாக கூறினார்.

பின்னர் பள்ளி படிப்பை முடித்த அவர் பெங்களூரு சென்று தொழில் மேலாண்மை படிப்பில் இளநிலை பட்டம் முடித்தார். அப்போது Teach for India என்ற அமைப்பின் சார்பாக பல்வேறு சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். டீச் ஃபார் இந்தியா அமைப்பின் மூலம் அரசு பள்ளிகளில் சென்று மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இந்த பயணம் தான் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாக இவர் கூறுகிறார்.

பெற்றோர் இல்லாத குழந்தைகள், எந்த ஒரு நிதி சார்ந்த பின்னணியும் இல்லாத குழந்தைகள், வீடு கூட இல்லாத குழந்தைகள் என பலரை நான் பார்த்து பேசி இருக்கிறேன் இந்தியாவில் இதுபோல ஏராளமான பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதை உணர்ந்த நான் இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு முடிவு எடுத்தேன் எனக் கூறுகிறார்.

இதனை அடுத்து வேலைக்கும் சென்று சமூக சேவையும் செய்ய வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார். இவ்வாறு தான் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்து பள்ளி குழந்தைகளின் நலனுக்காக பயன்படுத்துவாராம். இந்தியாவில் தற்போது சைபர் கிரைம் அதிகரித்து வருவதால் பள்ளியில் இருந்தே குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாம்.

எனவே 2024 ஆம் ஆண்டில் இவரும் இவருடைய சகோதரியும் இணைந்து Rural Tech rise நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி குறித்து பாடம் எடுக்க தொடங்கினார். கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களான விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மாணவர்களுக்காக பிரத்தியேக பாடத்திட்டங்களை தங்களுடைய நிறுவனமே உருவாக்குவதாக கூறும் இவர் பள்ளி மாணவர்கள் சுயதொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கிறாராம் என கூறுகிறார். படித்து முடித்த உடனே ஒரு நிறுவனத்தில் சென்று ஒருவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே சிறுவயதில் இருந்தே தொழில்முனைவு பாடங்களையும் கற்பிப்பதாக தெரிவிக்கிறார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+