ஏர் இந்தியா விமான விபத்து இந்தியர்களை மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பலருக்கு அடுத்த முறை விமானத்தில் பயணம் செய்யவே பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்றால் மிகையில்லை. ஆனால் சில அடிப்படை விஷயங்களை செய்தாலே இதுப்போன்ற விபத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
இந்திய விமானப் பயணிகள் பெரும்பாலும் தங்கள் விமானத்தின் பாதுகாப்பு நிலையை அறியாமலேயே பயணிக்கின்றனர். விமானங்கள் பளபளப்பாக தோன்றலாம், ஆனால் அவை எந்த அளவுக்கு பரிசோதிக்கப்படுகின்றன? என்பது யாருக்கும் தெரிவது இல்லை. இந்த விஷயத்தை தெரிந்துக்கொண்டாலே விமானத்தின் தரத்தையும், பாதுகாப்பையும் நீங்கள் எளிதாக மதிப்பிட முடியும்.

இந்திய விமானங்கள், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் உலகளாவிய விதிகளின் கீழ், கடுமையான பராமரிப்பு முறையை பின்பற்றுகின்றன. விமானங்கள், கார்களைப் போலவே, தவறாமல் பரிசோதிக்கப்படுகின்றன, ஆனால் மிகவும் கடுமையான முறையில் இந்த பரிசோதனை நடக்கிறது. DGCA விதிகளின்படி, நான்கு முக்கிய பராமரிப்பு நிலைகள் உள்ளன.
A-சோதனை: ஒவ்வொரு 400-600 விமான மணிநேரங்களுக்கும் (சுமார் 1-2 மாதங்கள்) நடத்தப்படும் லைட்டான பரிசோதனை. இது அடிப்படை அமைப்புகளை சரிபார்க்கிறது. B-சோதனை முதல்கட்ட சோதனை உடன் சேர்த்து செய்யப்படுகின்றன.
C-சோதனை: ஒவ்வொரு 20-24 மாதங்களுக்கும் நடத்தப்படும் ஆழமான பரிசோதனை. இதில் விமானம் பிரிக்கப்பட்டு, முக்கிய பாகங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
D-சோதனை: 6-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் முழுமையான மறுசீரமைப்பு. விமானம் முழுவதும் புதுப்பிக்கப்படுகிறது.
இந்த 4 கட்ட சோதனைகளில் ஒரு சிறிய தவறு நடந்தால் கூட விமானத்தை தரையிலேயே நிறுத்தப்படும். இதேபோல் இந்த சோதனைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் செய்யாமல் விமான பயன்படுத்தப்பட்டால் விமானம் மற்றும் விமான பயணிகளுக்கு ஆபத்து.
இந்திய விமான நிறுவனங்களின் நடைமுறைகள்: ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா போன்ற முன்னணி நிறுவனங்கள் DGCA விதிகளை கண்டிப்பான முறையில் பின்பற்றுகின்றன. ஆனால், சில குறைந்த கட்டண விமான நிறுவனங்கள், விமான ரத்துகளை தவிர்க்க, சிறிய பராமரிப்பு சோதனைகளை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
2022-24ல், ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனங்களின் பல விமானங்கள், பராமரிப்பு குறைபாடுகளால் DGCA ஆல் தரையிறக்கப்பட்டன. விமானங்கள் விதிகளை மீறும் போது DGCA களத்தில் இறங்கி கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
விமானத்தின் வயது: ஒரு விமானத்தின் வயது, அதன் பராமரிப்பு தேவைகளை முடிவு செய்கிறது. பழைய விமானங்கள் (10-15 ஆண்டுகள்) அதிக பரிசோதனைகளை தேவைப்படுத்துகின்றன, ஏனெனில் பழைய விமானம் அதிகப்படியான நேரம் பயன்படுத்தப்படுவதால் Wear and Tear பிரச்சனைகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில், பல விமானங்கள் 10-15 ஆண்டு பழமையானவை, ஆனால் DGCA தரநிலைகளுக்கு உட்பட்டவை என்பதால் இதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
இந்த நிலையில் விமாண பயணிகள் போர்டிங் செய்யும் முன், planespotters.net அல்லது flightaware.com போன்ற இணையதளங்களில் விமானத்தின் வயது மற்றும் வரலாற்றை சரிபார்க்கலாம். இதன் மூலம் விமானத்தின் மீதும் கூடுதல் நம்பிக்கை கிடைக்கும். இதன் மூலம் அச்சத்துடன் பறக்கும் நிலை இருக்காது.
"FIT TO FLY" சான்றிதழ்: ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும், பொறியாளர்கள் "தினசரி ட்ரான்ஸிட் சோதனை" செய்கின்றனர், இதில் விமானத்தின் வெளிப்புறம், இயந்திரங்கள், மற்றும் அடிப்படை அமைப்புகளை விரைவாக ஆய்வு செய்யப்படுகிறது. ஏதேனும் சிக்கல் இருந்தால், விமானம் பறக்க அனுமதிக்கப்படாது.
ஆனால், இறுக்கமான அட்டவணைகள் மற்றும் விமானங்களை விரைவாக இயக்க வேண்டிய நிர்ப்பந்தம் சில நேரங்களில் தவறுகளுக்கு வழிவகுக்குகிறது. இதனால் விமானத்தை இயங்க தாமதம் ஏற்பட்டால், பாதுகாப்பு சோதனைகளுக்காக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இதையும் விமான பயணிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பயணிகளாக நீங்கள் செய்ய வேண்டியவை: பயணிகளாக, உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சில எளிய முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:
விமான விவரங்களை சரிபார்க்கவும்: உங்கள் விமான எண்ணை (flight number) மற்றும் விமான வகையை (aircraft type) கூகுளில் தேடுங்கள்.
விமான வயதை அறியவும்: planespotters.net அல்லது flightaware.com இல் விமானத்தின் வயது மற்றும் பராமரிப்பு வரலாற்றை பாருங்கள்.
விமான நிறுவனத்தின் புகழ்: DGCA பாதுகாப்பு தணிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் பாதுகாப்பு திறனை ஆய்வு செய்யுங்கள்.
பாதுகாப்பு முதன்மை: மலிவு விமானமாக இருந்தாலும், பாதுகாப்பு உறுதி செய்யும் நிறுவனங்களில் மட்டுமே டிக்கெட் புக் செய்யுங்கள். நீங்கள் விமானத்தில் பறக்கும் போது உங்களுடைய நம்பிக்கை மட்டும் தான் உங்களுக்கு துணையாக இருக்கும். எனவே அடுத்த முறை விமானத்தில் பறக்கும் போது இதை பாலோ செய்யுங்கள்.
இந்திய விமான போக்குவரத்து துறை: இத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம் உள்ளது. DGCA, விமான நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை விதித்து, தவறுகளை கண்காணிக்கிறது. இருப்பினும், பணியாளர்கள் பயிற்சி, விமான பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கை, மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மேம்பாடுகள் தேவை.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications