இந்தியாவில் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ கடன் வாங்குவதற்கான வாய்ப்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது . வீடு ,மொபைல் போன் ,சுற்றுலா செல்வது என அனைத்திற்கும் இந்தியாவில் கடன் கிடைக்கிறது. கிரெடிட் கார்டுகள் நம்மை அன்றாட கடனாளிகளாகவே வைத்திருக்கின்றன.
இவ்வாறு எளிமையாக கடன் கிடைப்பது இந்தியர்களை அதிக அளவில் கடன் வாங்க தூண்டுகிறது. இவ்வாறு அதிகமாக கடன் வாங்குவது மிடில் கிளாஸ் மக்களாகத்தான் இருக்கின்றனர். தன்னுடைய சம்பளம் வந்த 5 நிமிடங்களில் எப்படி காலியாகிறது என்பது குறித்து ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டிருக்கும் பதிவு இந்திய மிடில் கிளாஸ் மக்களின் நிலையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

ரெடிட் தளத்தில் பதிவு செய்திருக்கும் அந்த நபர் " எனக்கு சம்பளம் வந்தது அக்கவுண்டில் கிரெடிட் ஆனது. அப்போது 43,000 ரூபாய் என் கணக்கில் இருந்தது. அதில் 19000 ரூபாய் நான் வீட்டு வாடகையாக செலுத்தினேன், கிரெடிட் கார்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் (செலுத்த வேண்டிய தொகை 60,000 ரூபாய்) செலுத்தினேன் , அதேபோல இரண்டு இஎம்ஐ இருக்கிறது அதற்காக 10,000 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது. இப்போது என் கணக்கில் 7 ரூபாய் தான் இருக்கிறது.
ஐந்து நிமிடங்களில் என் வங்கி கணக்கில் இருந்த பணம் 7 ரூபாய் என குறைந்துவிட்டது எனக் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களில் சம்பாதிக்கும் பலருடைய வங்கிக் கணக்கு சம்பளம் வந்த முதல் நாளே இப்படித்தான் இருக்கிறது என பலரும் அதில் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்தியாவில் மிக எளிமையாக கிரெடிட் கார்டுகள் கிடைப்பதும், பொருட்களை வாங்குவதற்கு இஎம்ஐ கிடைப்பதும் மக்களை ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னால் பணம் சேமிக்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து முதலில் பொருளை வாங்கி பயன்படுத்த தொடங்குவோம் வரும் சம்பளத்தை கொண்டு செலுத்தி விடுவோம் என்ற மனநிலைக்கு மாற்றியிருக்கிறது.
அண்மையில் கூட இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தனிநபர் கடன்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 75 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தது. இந்தியாவில் தனி நபர்கள் அவர்களின் சம்பளத்தில் 33 சதவீதம் தொகையை இஎம்ஐ- ஆக செலுத்துகின்றனர். முதலில் வாங்கு பின்னர் பணம் செலுத்து என்ற திட்டங்கள் இந்தியாவில் மக்களிடம் நுகர்வு போக்கை அதிகரித்து இருக்கிறது தவிர செல்வம் சேர்க்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து மக்களின் வெளிக்கொண்டு வந்துவிட்டது இது பெரிய சிக்கலை எதிர்காலத்தில் உண்டாக்கும் என பல்வேறு பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications