ஜூன் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் , ஜூன் 30க்கு பிறகு பற்பல மாற்றங்கள் வரவுள்ளன.
அது என்ன மாதிரியான மாற்றங்கள். இதனால் யாருக்கு என்ன பலன். யாருக்கு என்ன பிரச்சனை? வாருங்கள் பார்க்கலாம்.
சம்பளம் குறையலாம்
ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் இருக்கலாம். குறிப்பாக ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையலாம். அதேசமயம் ஊழியர்களி வருங்கால சேமிப்பான பிஎஃப் தொகை அதிகரிக்கலாம். இதனால் வருங்கால வைப்பு நிதி அதிகரிக்கலாம்.
புதிய தொழிலாளர் சட்ட வரைமுறைகள்
இந்த புதிய தொழிலாளர் சட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 23 மாநிலங்கள் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை வரைமுறை செய்துள்ளன. இன்னும் 7 மாநிலங்கள் வரைமுறைகளை வகுக்கவில்லை.
டிஏ அதிகரிக்கலாம்
ஜூலை மாதத்தில் இருந்து புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் டிஏ விகிதமும் அதிகரிக்கலாம். அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது டிஏ விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சம்பளத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.
டிடிஎஸ் மாற்றம்
ஜூலை 1 முதல் டிடிஎஸ் உடன் இணைக்கப்பட்ட வரி விலக்கு விதி அமலுக்கு வரவுள்ளது. இதனால் பட்ஜெட்டில் வருமான வரி சட்டத்தில் 194R என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் கீழ் ஒரு வருடத்தில் 20,000 அல்லது அதற்கு மேல் லாபம் கிடைத்தால், அதற்கு 10% டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
மருத்துவர்களுக்கு டிடிஎஸ்
அதோடு ஜூலை 1 முதல் டிடிஎஸ் விதிமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன் படி மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் அளிக்கும் இலவச பொருட்கள், இலவச மாத்திரைகள் மற்றும் பரிசுப் பொருட்களும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
டோக்கனைஷேசனில் மாற்றம்
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான டோக்கனைஷேசன் முறையானது, ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டா சேமிக்க முடியாது?
கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே ஜூலை முதல் தேதி முதல் அமலாகும் புதிய விதிகள் ஆறுதலாகத்தான் இருக்கும். ஏனென்றால், ஆன்லைன் இணையதளங்கள் இனிமேல் வாடிக்கையாளர்களின் கார்டு டேட்டாக்களை சேமித்து வைக்க முடியாது.
பிபிஐ
நாட்டில் உள்ள அனைத்து வங்கி அல்லாத ப்ரீபெய்டு பேமெண்ட் கருவி (PPI) வழங்குபவர்களுக்கும், கிரெடிட் லைன்களைப் பயன்படுத்தி ப்ரீபெய்டு கார்டுகள உட்பட கருவிகளை ஏற்றுவதில் இருந்து கட்டுப்படுத்துமாறு ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு
அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாம் இந்த சேவையை செயல்படுத்தும் கடைசி மாநிலமாகும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications