பெங்களூரை காப்பாற்ற களமிறங்கிய ஐடி ஊழியர்கள்.. உண்மையிலேயே செம விஷயம் தான்..!

பெங்களூரு: ஒரு காலத்தில் சிட்டி ஆப் கார்டன்ஸ் (City of Gardens) என அழைக்கப்பட்ட பெங்களூரு தற்போது எங்கு பார்த்தாலும் வானுயர கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு என கான்கிரீட் காடுகளாக காட்சிதருகிறது. இந்நிலையில் பெங்களூருவை மீண்டும் சிட்டி ஆப் கார்டனாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது ஒரு தன்னார்வ அமைப்பு.

கடந்த 2007ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் சிலர் நகரின் பசுமையை மீட்டெடுக்க மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கினர். வார இறுதி நாட்களில் பொழுதுபோக்காக இது தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே ஏராளமானவர்கள் இதில் இணைந்தனர்.

பெங்களூரை காப்பாற்ற களமிறங்கிய ஐடி ஊழியர்கள்.. உண்மையிலேயே செம விஷயம் தான்..!


ஓராண்டில் இந்த மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்ததை கண்டனர். இதனை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கியது தான் சே ட்ரீஸ் (SAY TREES)அமைப்பு.

இந்த அமைப்பில் பெங்களூருவின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களும் தன்னார்வத்தோடு இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். பெங்களூர் மட்டுமின்றி பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடும் பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் பெங்களூருக்கு அருகில் இருக்கக்கூடிய ஓசூர் பகுதியில் இந்த அமைப்பு 1200 மரக்கன்றுகளை நட்டுள்ளது வரும் மாதத்தில் இந்த எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவை மீண்டும் பசுமை நகரமாக மாற்றுவதே தங்கள் இலக்கு என இவர்கள் கூறுகின்றனர். பாரம்பரிய மர வகைகளை சேர்ந்த கன்றுகளை நடுகின்றனர். பெங்களூருவை பசுமை நகரமாக மட்டுமின்றி ஆரோக்கியமான மக்கள்தொகை கொண்ட ஒரு நகரமாக உருவாக்குவதே இவர்களின் நோக்கமாக உள்ளது.

கிட்டதட்ட ஏழு ஆண்டுகளாக செயல்படக்கூடிய இந்த அறக்கட்டளையில் பல்வேறு தனி நபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து புது புது முறையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

மியாவாக்கி முறையில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் 155 ஹெக்டர் நிலங்களின் பசுமையை மீட்டெடுக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். வெறுமனே மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமில்லாமல் அங்கு இருக்கக்கூடிய மக்களிடம் அவற்றின் அவசியமும், அவற்றை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர். சே ட்ரீஸ் (SAY TREES)என்பது ஒரு அமைப்பல்ல ஒரு இயக்கம் என இதில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது வரை இந்த அமைப்பு மூலம் 4,80,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதேபோல பெங்களூருவை சுற்றியுள்ள 80 இடங்கள் பிரத்யேக தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.பெங்களூரு மக்கள் தங்களின் வார இறுதி நாட்களில் ஒன்று இரண்டு மணி நேரங்களை மட்டும் செலவழித்தாலே போதும் பெங்களூர் நகரம் மீண்டும் தன்னுடைய பசுமையை பெற முடியும் என சே ட்ரீஸ் (SAY TREES)அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளுக்கு நாள் தங்கள் அமைப்பில் இணைந்து பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். சே ட்ரீஸ் (SAY TREES)இணையதளத்தில் தற்போது எந்தெந்த பகுதிகளில் பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம் என்பது குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள் எப்படி இதில் இணைந்து தங்களது பங்களிப்பை வழங்க முடியும் என்பது குறித்த தகவல்கள் அனைத்தும் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+