ரத்தன் டாடா சமூக ஊடக தளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட இந்தியாவில் மிகவும் பிரபலமான கோடீஸ்வரர்களில் ஒருவர். ரத்தன் டாடா பொதுவெளியில் அதிகம் காணப்படுவதில்லை, ஆனால் பாப்பராசிகளால் அவரைக் காணும்போதெல்லாம், அவர் தனது நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்கும் தனிப்பட்ட உதவியாளரான சாந்தனு நாயுடுவுடன் இருப்பார்.
சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோ சில வருடங்களுக்கு முன்பு வைரலான பிறகு முதலில் வெளிச்சத்துக்கு வந்தார். அப்போதிருந்து, சாந்தனு நாயுடு தொழில்துறையில் அறியப்பட்ட முகமாகிவிட்டார்.

சாந்தனு நாயுடுவை குட்ஃபெல்லோஸ் நிறுவனர் மற்றும் ரத்தன் டாடாவின் உதவியாளர் என்று பலர் அறிந்திருந்தாலும், அவர் எப்படி கோடீஸ்வரரிடம் வேலை செய்தார் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். சாந்தனு நாயுடு புனேவில் பிறந்து வளர்ந்தார். அவர் 2014 இல் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற பிறகு, சாந்தனு நாயுடு 2016 இல் கார்னெல் ஜான்சன் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சாந்தனு நாயுடு புனேவில் உள்ள டாடா எல்க்ஸி நிறுவனத்தில் ஆட்டோமொபைல் டிசைன் இன்ஜினியராக வேலையில் சேர்ந்தார்.
வேகமாக வரும் வாகனங்கள் மோதி இறந்த நாய்களின் சடலங்கள் மீது வாகனங்கள் கடந்து செல்வது சாந்தனு நாயடு மனத்தை புன்படுத்திய நிலையில் இந்த சிக்கலை தீர்க்க, நாய்களுக்கு தெருவிளக்குகள் இல்லாமல் கூட இரவில் தெரியும் வகையில் காலர்களை உருவாக்க யோசனை வந்தது என்றும் சாந்தனு நாயுடு தெரிவித்தார்.
அவரது ஐடியாவுக்கு முதலீட்டையும், அங்கிகாரத்தையும் பெற, சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவுக்கு தனது வணிக முயற்சியின் விவரங்களுடன் கடிதம் எழுதினார். ஆச்சரியம் என்னவென்றால், ரத்தன் டாடா அவரைச் சந்தித்து இந்த முயற்சியைப் பற்றி விவாதிக்க அழைத்தார்.
இரண்டு நாய் பிரியர்களின் சந்திப்பு அவர்களின் நட்புக்கு வழிவகுத்தது, இது ரத்தன் டாடாவின் உதவியாளராக நைட் வேலைக்கு உதவியது. அவருக்கு பொது மேலாளராகவும் வேலை கிடைத்தது.
மேலும் பில்லியனர் நாயுடுவின் புதிய ஸ்டார்ட்அப் குட்ஃபெலோஸில் முதலீடு செய்தார். இது மூத்த குடிமக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஸ்டார்ட்அப் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என கூறப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் பலனுள்ளதாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications