இந்திய பங்கு சந்தையானது கடந்த அமர்வில் தொடர்ந்து 4 நாட்களாக சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 927 புள்ளிகள் சரிவில் காணப்பட்டது. நிப்டி 4 மாத சரிவில் முடிவடைந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பணவீக்கத்தின் மத்தியில் சந்தையில் மீண்டும் செல்லிங் அழுத்தம் என்பது அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையிலும் நிலவி வரும் பதற்றம் காரணமாக சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய சந்தையில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதும் இன்று நடைபெறவுள்ள நிலையில், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதானி பங்குகள் சரிவு
இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக அதானி குழும பங்குகள் தொடர்ந்து இன்னும் சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக கெளதம் அதானி தலைமையிலான 10 நிறுவனங்களும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், பல பங்குகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக கடந்த அமர்வில் மட்டும் 51,294 கோடி ரூபாய் சந்தை மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது.
வட்டி அதிகரிப்பு
நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பணவீக்கம் என்பதும் யூகிக்க முடியாத ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆக ரிசர்வ் வங்கி கூட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கூட்டத்திலேயே 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்தது. இது பணவீக்கத்தினை எதிர்த்து போராடும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வரவிருக்கும் கூட்டத்தில் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
சில்லறை பணவீக்கம்
இந்தியாவின் வருடாந்திர சில்லறை பணவீக்கம் என்பது ரிசர்வ் வங்கியின் இலக்கினை தாண்டியுள்ளது. இது குறித்து புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி மாதத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.52% எனும் அளவுக்கு உச்சம் எட்டியுள்ளது. இது உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு, பல முக்கிய தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த பொருட்கள் உட்பட பல பொருட்கள் விலையும் உச்சம் தொட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
இம்மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது எனலாம். தற்போது 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.5% ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் 2022 -23 ஆண்டில் சில்லறை பணவீக்கம் என்பது 6.5% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இனியும் விலைவாசி என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2 ஆண்டுகளாக பணவீக்கம் 6% கீழாக உள்ளது.


Click it and Unblock the Notifications