சுகுணா என்றாலே சுகுணா சிக்கன் என்ற பிராண்ட் தான் நம் மனதில் தோன்றும். அந்த அளவுக்கு இந்த பிராண்டை மக்கள் மனதில் நிலை நிறுத்த செய்து பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி இருக்கிறார்கள் சகோதரர்கள் சௌந்தரராஜன் மற்றும் சுந்தரராஜன்.
1982ஆம் ஆனு சுந்தரராஜன் கோழி வளர்ப்பு துறையில் கால்பதித்தார். கோவை அருகே உடுமலைப்பேட்டையில் 5000 ரூபாய் முதலீட்டில் இந்த தொழிலை அவர் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு சுகுணா ஏஜென்சீஸ் என்ற பெயரில் முட்டை, கோழி, கோழிகளுக்கான தீவனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். 1994ஆம் ஆண்டு சுந்தரராஜன் தன்னுடைய சகோதரர் சௌந்தரராஜனுடன் இணைந்து Suguna Poultry Farm Pvt. Ltd என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

இந்த சகோதரர்கள் கோழி வளர்ப்பு முறையில் பல்வேறு நவீனங்களை கொண்டு வந்து இந்த துறையில் பெரிய புரட்சியையே உருவாக்கினர். அதாவது ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பு முறையை அறிமுகம் செய்து முன்னோடியாக மாறினர். தொடக்கத்தில் இவர்களுக்கு தொழிலில் வெற்றி கிடைக்கவில்லை. பல்வேறு நிதி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதனை சமாளித்த போது தான் பல்வேறு விவசாயிகளும் கோழி வளர்ப்பை கைவிடுவதை கண்டனர்.
அப்போதுதான் ஒப்பந்த கோழி வளர்ப்பு முறையை கொண்டு வர வேண்டும் என்ற யோசனை வந்தது. எனவே நேரடியாக விவசாயிகள் தங்களை அணுகி ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபடலாம் என அறிவித்தனர். 1990ஆம் ஆண்டு சுகுணா ஃபுட்ஸ், மூன்று பண்ணைகளுடன், ஒப்பந்தக் கோழி வளர்ப்பைத் தொடங்கியது. அதில் விவசாயிகளுக்கு கோழிகளை வளர்ப்பதற்குத் தேவையான தீவனம் முதல் மருந்துகள் வரை அனைத்தையும் வழங்கியது.
இந்த சகோதரர்களின் தொடர் முயற்சியால் பல விவசாயிகளும் ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபட தொடங்கினர். சுந்தரராஜன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர். எனவே வெளிநாடுகளில் எந்த வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தேடி தேடி ஆய்வு செய்து அதனை தமிழ்நாட்டிற்கும் கொண்டு வந்தார்.
கோழி வளர்ப்பில் இவர் கொண்டு வந்த நவீனம் தான் சுகுணா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட காரணம். படிப்படியாக நிறுவனத்தின் வருமானம் உயர்ந்து 10,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சுகுணா ஃபுட்ஸ் மூலம் ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருமானம் பார்க்கின்றனர்.
சுகுணா இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முழு தானியங்கு தீவன ஆலையை கர்நாடகாவின் ஹோஸ்கோட்டில் அமைத்துள்ளது. மதுரையிலும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு கொண்ட பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணையை நிறுவியுள்ளது. இந்தியாவில் கோழிப்பண்ணை சந்தையில் 18% பங்கை சுகுணா கொண்டிருக்கிறது. சுகுணா ஃபுட்ஸ் நிறுவன பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications