இந்தியாவில் கிராமப்பகுதிகளுக்கு சென்றால் கண்டிப்பாக டிவிஎஸ்50 வாகனம் நம் கண்களில் தென்படாமல் இருக்காது. அந்த அளவுக்கு சாமானிய மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.
114 ஆண்டுகளாக இந்திய வாகன விற்பனை துறையில் அசைக்க முடியாத நிறுவனமாக டிவிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் தன்னுடைய கிளைகளை பரப்பி உள்ளது. இருசக்கர வாகனம், ஆட்டோ என வாகன உற்பத்தியும், வாகன உதிரிபாக உற்பத்தியிலும் கால் பதித்து வருவாய் அடிப்படையில் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு வித்திட்டவர் டிவி சுந்தரம் ஐயங்கார்.

வழக்கறிஞராக இருந்து வங்கியாளராக பணியாற்றி பின்னர் டிவிஎஸ் மோட்டார்ஸ் என்ற மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். டி வி சுந்தரம் ஐயங்கார் 1877 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தவர். முதலில் சட்டப் படிப்பை படித்த இவர் பின்னர் இந்திய ரயில்வே மற்றும் வங்கிகள் என பல இடங்களிலும் வேலை செய்தார். தானே சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என முடிவு செய்து 1911 ஆம் ஆண்டு டிவி ஐயங்கார் அண்ட் சன்ஸ் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார்.
மதுரை மாவட்டத்தில் பேருந்து சேவை வழங்கும் நிறுவனமாகத்தான் இது முதலில் தொடங்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் பேருந்து சேவையும் இவர்களுடைய தான். பின்னாளில் இவர் வாகன உற்பத்தி துறையில் கால் பதிக்க விரும்பினார். அப்படித்தான் 1962 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருசக்கர வாகனங்களுக்கு தேவையான கம்ப்ரஸர்கள் மற்றும் பிற உதிரி பாகங்களை தயாரிக்க தொடங்கினார்.
1976 ஆம் ஆண்டு ஓசூர் நகரில் டிவிஎஸ் உற்பத்தி ஆலையை நிறுவி மொபெட்டுகள் தயாரிப்பில் இறங்கினார். 1980 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் முதல் இருசக்கர வாகனமான டிவிஎஸ் 50 உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. அப்போது முதல் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு டிவிஎஸ் நிறுவனம் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து இருசக்கர வாகன உற்பத்தியில் தீவிரமாக இறங்கியது.
அப்படி தான் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வாகனங்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக பிரிந்து விட்டன. இதனை அடுத்து இந்த நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிவி சுந்தரத்தை பொருத்தவரை ஒரு தொழிலதிபராக மட்டுமில்லாமல் பிரச்சினைகளை திறம்பட கையாள்வதில் வல்லவராக இருந்தவர்.
இரண்டாம் உலகப் போரின் போது மெட்ராஸ் மாகாணத்தில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது அப்போது டிவிஎஸ் கேஸ் பிளாண்ட் என்பதை உருவாக்கி அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டார். அந்த காலத்திலேயே தன்னுடைய மகளுக்கு மறுமணம் செய்து வைத்து மிகப்பெரிய சமூக சீர்த்திருத்தத்திற்கு வித்திட்டவர்.
தற்போது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 60,000 க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். 8.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டும் நிறுவனமாகவும் மாறி இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் அடையாளமாக இன்றும் திகழ்கிறது. டிவி சுந்தரம் பல தலைமுறையினருக்கும் வாகன உற்பத்தி பிரிவில் முன்னோடியாக நிற்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications