இந்திய மக்கள் மத்தியில் கடந்த ஒரு வாரத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக இருந்தது தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு தான். தமிழ்நாட்டு 2 நாள் கூட்டத்தில் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு விருப்பத்தைப் பெற்று இருக்கும் வேளையில், குஜராத் கூட்டத்தின் முதல் நாள் முடிவில் 234 ஒப்பந்தங்கள் மூலம் 10.31 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு விருப்பத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இரு மாநிலங்களுக்கும் வாகன உற்பத்தி முக்கியமான வர்த்தகமாக இருக்கும் வேளையில் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆட்டோமொபைல் சார்ந்த முதலீடுகள் சற்று அதிகமாகவே இருந்தது. Gateway to the Future என்ற தீம் அடிப்படையில் குஜராத் முதலீட்டாளர் மாநாடு நடப்பது அனைவரையும் கவர்ந்தது.

ஆனால் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் ஹூண்டாய் மூலம் எதிர்காலத்தை மாற்றியமைக்கப் போகும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் காரை அறிமுகம் செய்த வேளையில், குஜராத் மாநில முதலீட்டாளர் கூட்டத்தில் மாருதி சுசூகி அடுத்து அறிமுகம் செய்யப்போகும் 100 சதவீத எலக்ட்ரிக் கார்-ஐ அறிமுகம் செய்தது பலரும் கவனித்தனர்.
ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே 20000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்த, நிலையில் முதலீட்டாளர் கூட்டத்தில் 6180 கோடி ரூபாய் புதிய முதலீட்டை அறிவித்த, மொத்த முதலீடு 26,180 கோடி ரூபாயை அறிவித்துள்ளது. இதில் முக்கியமான ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து ஹைட்ரஜன் வேலி இன்னோவேஷன் ஹப்-ஐ அமைக்க 180 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் ஹூண்டாய், NEXO என்னும் ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்து பியூயல் செல் மூலம் மின்சாரமாக மாற்றி ஒரு எலக்ட்ரிக் வாகன கட்டமைப்பில் இயங்கும் காரை வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதன் வாயிலாகத் தான் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் ஹூண்டாய் NEXO கார் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது.
மறுமுனையில் குஜராத்தில் சுசூகி தற்போதுள்ள ஆலையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க ரூ.3,200 கோடியும், குஜராத் மாநிலத்தில் இரண்டாவது கார் தொழிற்சாலையை அமைக்க ரூ.35,000 கோடியும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்ததுள்ளது. இதன் மூலம் 2030-32 காலகட்டத்தில் வருடத்திற்கு 20 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறனைப் பெற உள்ளது.

வைப்ரென்ட் குஜராத் கூட்டத்தில் மாருதி சுசூகி விரைவில் அறிமுகம் செய்ய உள்ள eVX காரை பார்வைக்காக மக்களுக்கு வைக்கப்பட்டு இருந்தது. 60 கிலோவாட் பேட்டரி கொண்ட இந்தக் கார் ஒரு முறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் 550 கிமீ வரையில் செல்லக் கூடியது.
இதைப் பார்க்கும் போதும் ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு ஒரு படி மேல் என்பது தெரிகிறது. தூத்துக்குடி ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது, சென்னையில் ஹூண்டாய் ஹைட்ரஜன் கார் தயாரிக்கப்படுகிறது. வேற லெவல் சார் இது..
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications