சென்னை: இந்தியாவின் முன்னணி காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாடு படிப்படியாக உருவெடுத்து வருகிறது. முன்பெல்லாம் தோல் சம்பந்தப்பட்ட காலணிகள் உற்பத்தி தான் இங்கே அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தோல் அல்லாத பொருட்களில் இருந்து தயார் செய்யப்படும் காலணிகளின் மையமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
காலணி உற்பத்தி: அதற்கேற்ற வகையில் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட கூடிய ஒரு முன்னணி பிராண்டின் காலணிகள் தமிழ்நாட்டில் முதன் முதலில் உற்பத்தி செய்யப்படுகின்றன . சென்னையை தலைமை இடமாகக் கொண்ட ஃபரிதா குழுமம் தைவான் நாட்டை சேர்ந்த சிஜே என்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தோடு இணைந்து ஒரு கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. இந்த கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் விற்பனையாக கூடிய நியூ பேலன்ஸ் என்ற பிராண்டுக்கான காலணிகளை இந்தியாவில் முதன்முறையாக இந்த நிறுவனம் உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது.

ஃபரிதா குழுமம்: இதற்காக ஃபரிதா குழுமத்திற்கும் தைவானின் சிஜே என்டர்பிரைஸ் குழுமத்திற்கும் இடையே ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 18 மாதங்களுக்கு முன்னர் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதன்முறையாக இந்தியாவில் இருந்து நியூ பேலன்ஸ் பிராண்டுக்கான ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் இந்தியாவில் அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வியட்நாமில் பயிற்சி: முதல்கட்டமாக ஏற்கனவே உற்பத்தி மையம் தொடங்கப்பட்டு 2500 காலணிகள் தயாரிக்கப்பட்டு விட்டதாக ஃபரிதா குழுமத்தின் தலைவர் ரஃபீக் அகமத் தெரிவித்திருக்கிறார். அடுத்ததாக வரும் ஜனவரி மாதம் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான ஒரு உற்பத்தி ஆலையையும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் 16,000 காலணிகள் உற்பத்தி செய்யப்படும் என அவர் கூறியிருக்கிறார். இதற்காக ஃபரிதா நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் வியட்நாமிற்கு சென்று மூன்று மாத காலம் பயிற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார் .
ரூ.2000 கோடி முதலீடு: தமிழ்நாட்டில் திருப்பத்தூர் ஆம்பூர் பகுதியில் மிகப்பெரிய ஒரு காலணி உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் 120 ஏக்கர் பரப்பளவில் 2000 கோடி ரூபாய் முதலீடுட்டில் இந்த உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்றும் முதல் கட்டமாக 1200 கோடி முதலீடு செய்து இரண்டு ஆண்டுகளுக்குள் ஆலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் நியூ பேலன்ஸ் பிராண்ட்: ஆண்டுக்கு 800இல் இருந்து 1000 கோடி ரூபாய் வரை காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என திட்டமிட்டு தங்கள் நிறுவனம் செயல்படுவதாக அவர் கூறியிருக்கிறார். இந்திய சந்தை மட்டும் இல்லாமல் அமெரிக்க சந்தைக்கு தேவையான நியூ பேலன்ஸ் ஷூக்களும் இங்கே உற்பத்தி செய்யப்படும் என அவர் கூறியிருக்கிறார். சீனா ,ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் இங்கிருந்து காலணி ஏற்றுமதி செய்யப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
காலணி உற்பத்தி மையம்: உலகில் முன்னணி காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாடு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த காலணி உற்பத்தி ஆலைகள் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தருகின்றன. ஏற்கனவே நைக், அடிடாஸ், கிராக்ஸ் போன்ற உலகின் முன்னனி பிராண்டுகளின் காலணிகள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications