இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. உற்பத்தி துறை , மின்னணு சாதனங்கள் உற்பத்தி, ஐடி என அனைத்திலுமே தமிழ்நாடு முன்னிலையில் தான் இருக்கிறது.
நாட்டின் ஜிடிபி பங்களிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது. கூடிய விரைவில் தமிழ்நாடு மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்து விடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழ்நாட்டின் பொருளாதாரம் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறது. நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தானின் ஜிடிபியையும் தமிழ்நாட்டின் ஜிடிபியையும் இந்த கடந்த 30 ஆண்டுகளோடு நாம் ஒப்பிட்டு பார்க்கலாம்.

சென்னை அப்டேட்ஸ் என்ற எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு மற்றும் பாகிஸ்தானின் ஜிடிபி ஒப்பீடு செய்து வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி 1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஜிடிபி 15.7 பில்லியன் டாலர்களாக இருந்தது அந்த சமயத்தில் பாகிஸ்தானின் ஜிடிபி 57.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதுவே 2000 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஜிடிபி 20.6 பில்லியன் டாலர்களாகவும் பாகிஸ்தானின் ஜிடிபி 82.1 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது.
2005 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஜிடிபி 30.5 பில்லியன் டாலர்களாகவும் பாகிஸ்தானின் ஜிடிபி 139.2 பில்லியன் டாலர்களாகவும் வளர்ச்சி அடைந்திருந்தன. 2015 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகம் எடுக்க தொடங்கியது. தமிழ்நாட்டின் ஜிடிபி 2015 ஆம் ஆண்டில் 128.5 பில்லியன் டாலராக இருந்தது அதே சமயத்தில் பாகிஸ்தானின் ஜிடிபி 284.2 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2015 ஆம் ஆண்டிலிருந்து தான் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் வேகம் எடுக்க தொடங்கியது என கூறலாம்.
2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 200 பில்லியன் டாலர்களை கடந்து 208.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய தொடங்கி 310.9 பில்லியன் டாலர்கள் என சரிவை கண்டு இருந்தது. 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஜிடிபி 419.5 பில்லியன் டாலர்களாக இருக்கிறது, பாகிஸ்தானின் ஜிடிபி 397 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருக்கிறது. அதாவது பாகிஸ்தானின் ஜிடிபியை மிஞ்சி வளர்ந்துவிட்டது.
அடுத்ததாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளோடு போட்டி போட தொடங்கி இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதன் பொருளாதாரம் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை ஒரு சீரான வளர்ச்சியை அடைந்து வந்தது 2021 ஆம் ஆண்டிலிருந்து இந்த வளர்ச்சி வேகம் எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பாசிட்டிவான பொருளாதாரத்தை கொண்டிருந்த ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருந்து வந்தது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து உள்கட்டமைப்பு, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தும்போது இன்னும் அதன் பொருளாதாரம் பல மடங்கு வளரும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications