தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 ஆம் தேதி (இன்று) துவங்கியிருக்கும் வேளையில் இதன் மூலம் மக்களுக்கு என்ன லாபம், என்ன நன்மை என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கும். இதுகுறித்து தெரிந்துகொள்வதும் மிகவும் அவசியம்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் அடிப்படையாக நாம் பெறுவது முதலீடு, ஆனால் இது வெறும் துவக்கப்புள்ளி மட்டுமே. இத்தகைய மாநாட்டின் மூலம் முதலீட்டின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், வேலையில்லாமல் இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும்.

இதனால் தமிழ்நாட்டு மக்களின் per capita income எனப்படும் தனிநபர் வருமானம் அதிகரிக்க வழி வகுக்கும், முக்கியமாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வறுமை ஒழிக்கப் பெரிய அளவில் பயன்படும் இந்த முதலீடுகள். வறுமை ஒழிக்கப்பட்டு, மக்களின் வருமானம் உயர்ந்துவிட்டாலே மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிடும். இதன் பின்பு நடக்கும் மாற்றங்களை விவரிக்கத் தேவையில்லை.
இதைத் தாண்டி இத்தகைய முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் மேம்பட உள்ளது. மின்சார விநியோகத்தில் துவங்கி சாலை மற்றும் விமானப் போக்குவரத்து சேவை, மருத்துவச் சேவை, பொழுதுபோக்கு எனப் பல பிரிவுகளில் வளர்ச்சி அடையும்.
இந்தச் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாகக் கிடைக்கும் முதலீடுகள் உள்ளூர் பொருளாதாரத்தையும், உள்கட்டமைப்பையும், தனிநபர் வருமானத்தை உயர்த்தும். இத்தகைய முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றி மாநிலத்தின் ஒவ்வொருவரின் வெற்றி என்பது மறுக்க முடியாது.
இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவங்கி நாளை வரையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தின் முக்கிய இலக்கே வளர்ச்சி வாய்ப்புகளைச் சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சியை விநியோகிக்கப்பட வேண்டும் என்பது தான்.
இதேபோல் இந்தச் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் உற்பத்தி, ஐடி சேவைகளில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு 9 கூட்டணி நாடுகளும் மற்றும் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட வேண்டும் என முக்கிய இலக்கை அடைய இந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டம் மிகவும் முக்கியமானது. இந்த 2 நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு இத்தகைய உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தை 2015 மற்றும் 2019 இல் நடத்தி பெரும் வெற்றியைப் பெற்று இருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடப்பது இதுவே முதல் முறையாகும், இதனால் மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறது. இந்த வேளையில் எந்த நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்யப்போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications