சென்னை: இந்தியாவின் காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. இதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளே காரணம். இந்தியாவில் காலணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 38 சதவீதம் , குறிப்பாக தோல்களில் இருந்து உருவாக்கப்படும் காலணிகள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 47 சதவீதம்.
தமிழ்நாடு அரசை பொருத்தவரை காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே தோலில் இருந்து தயாரிக்கப்படும் காலணி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்பதால் அரசு தோல் அல்லாத பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் காலணி உற்பத்திக்கு முக்கியத்துவம் தருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை சுற்றி தான் உற்பத்தி ஆலைகளும் நிறுவனங்களும் அமைக்கப்படுகின்றன. இதனால் மற்ற மாவட்டங்களில் வளர்ச்சி இல்லை குறிப்பாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் குறிப்பாக உற்பத்தியை கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது.
ஆனால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிக திறன் தேவைப்படாத ஆலைகளை நிறுவினால் மட்டுமே அங்கிருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும். அதற்காகத்தான் தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களிலும் காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவி வருகிறது. நவீன மின்னணு சாதனங்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள் உற்பத்தி, ஐடி உள்ளிட்ட பிரிவுகளில் தமிழ்நாடு முன்னேறி இருந்தாலும் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் எந்த ஒரு தொழில் வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படாமல் இருந்தது. அங்கு இருக்கக்கூடிய பெரிய சவால் அங்கிருக்கும் மக்களுக்கு பெரிய அளவில் படிப்பறிவு இல்லை என்பதுதான்.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு தோல் மற்றும் தோல் அல்லாத பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் காலணி உற்பத்தி ஆலைகளை கொண்டு வரும்போது குறைந்த படிப்பறிவு கொண்டவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர முடியும் என முடிவு செய்து அதற்கு ஏற்ப பணியாற்றி வருவதாக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளை சேர்ந்த தோல் அல்லாத பிற பொருட்களிலிருந்து காலணிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 17,550 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாகவும் இதன் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தற்போது கிராக்ஸ், நைக், அடிடாஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிராண்டுகளுக்குமான காலணிகள் உற்பத்தி செய்து அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
உலக அளவில் தற்போது 86 சதவீத காலணிகள் தோல் அல்லாத மற்ற பொருட்களில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில் இதுபோன்ற காலணிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோல் இல்லாத பொருட்களில் இருந்து காலணிகளை தயாரிக்க கூடிய பல்வேறு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கின்றன.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரக்கூடிய கோத்தாரி ஆலையின் சுமார் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் கிராக்ஸ் நிறுவனத்திற்கான காலணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல கூடிய விரைவில் கரூர் நகரிலும் அடிடாஸ் நிறுவனத்தின் காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது. இவ்வாறு காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாடு படிப்படியாக மாறி வருகிறது. அண்மையில் தான் நைக் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மற்றும் திண்டிவனத்தில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவியது.
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல்கள் காரணமாக 2017ஆம் ஆண்டில் இருந்தே பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டன. அந்த சமயத்தில் அவர்களுக்கு விருப்பமான உற்பத்தி மையமாக இந்தியாவே தோன்றியது. ஏனெனில் இந்தியாவில் திறன்மிகு மனித வளம் அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
இந்த வாய்ப்பை இந்தியாவில் சரியாக பயன்படுத்தி கொண்டது தமிழ்நாடு தான் என இந்த துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல காலணி உற்பத்தி ஆலைகள் அமைக்கக்கூடிய நிறுவனங்கள் தங்களுக்கு எளிதாக துறைமுகத்தை அடையும் பகுதிகளில் ஆலைகளை அமைத்து தருமாறு கேட்கிறார்கள் என தொழில் துறை செயலாளர் அருண்ராய் கூறுகிறார்.
இவ்வாறு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள காலணி உற்பத்தி ஆலைகளில் பெரும்பாலும் பெண்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது மற்றொரு சிறப்பு. பெரும்பாலும் இந்த தோல் இல்லாத காலணி உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தைவான் நாட்டு நிறுவனங்கள் தான் . எனவே தமிழ்நாட்டில் இந்த நிறுவனங்கள் வந்து ஆலையை தொடங்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு தொழில் துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது.
இதற்காக பலமுறை தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தைவான் பயணம் சென்று செய்து அங்கு இருக்கக்கூடிய தைவான் காலனி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை சந்தித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் நாடு அரசு தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான ஒரு தனி கொள்கையை அறிவித்தது. இதன் மூலம் இந்த பிரிவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டு காலமாக தமிழ்நாடு அரசு இதற்காக ஒரு பிரத்தியேக அதிகாரியை தைவானிலேயே தங்க வைத்து அங்கு இருக்கும் காலணி உற்பத்தி நிறுவனங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்க வைத்திருப்பதாக அதிகாரிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்த முதலீடுகள் எல்லாம் மதுரை, கடலூர், சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி , தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக இருக்கிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அண்மையில் கூட மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தோல் இல்லாத காலணி உற்பத்தி பூங்காக்கள் நிறுவப்படும் என்றும் இதற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications