பெங்களூரு மாநகரம் தற்போது கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசலில் தவித்து வரும் நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் தொழில்நுட்பங்களை வழங்கியுள்ளனர்.
சாலைகளில் இருக்கும் குழிகளைக் கண்டு சென்சார்கள் மூலம் கண்டறிவது , கால்வாய்களில் இருக்கும் அடைப்புகளை ரோபோக்கள் மூலம் கண்டறிந்து சரி செய்வது என்பன உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டை சேர்ந்த பொறியல் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம் இதனை பெங்களூர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக பயன்படுத்த இருக்கிறது.

பெங்களூருவில் லேசாக மழை பெய்தாலே பல இடங்களில் மழை நீர் தேங்கும் நிலையில் இந்த தொழில்நுட்பம் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் என எல்&டி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த பொறியியல் மாணவர்களின் ஐடியாக்களை கொண்டு தங்கள் நிறுவனம் அந்த தொழில்நுட்பங்களை நிஜ உலக பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம் என எல்என்டி டெக் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என ஆசிஷ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தான் தங்கள் நிறுவனம் மாணவர்களின் ப்ராஜெக்டை அடிப்படையாகக் கொண்டு ஏஐ அடிப்படையிலான ஒரு இயந்திரத்தை உருவாக்கி தொழிற்சாலைகளுக்கு வழங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தங்கள் நிறுவனம் டெக்ஜிஎம் என்ற பெயரில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை நிஜ உலகில் பயன்படுத்துவதற்கான பொருட்களாக மாற்றுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது என தெரிவித்திருக்கிறார்.
மாணவர்களின் இந்த புதிய யோசனைகள் அனுமதி பெற்ற உடன் எல்&டி சர்வீசஸ் நிறுவனம் மாணவர்களை ஒருங்கிணைத்து அந்த தொழில்நுட்பத்தை நிஜ உலகிற்கு பயன்படுத்தும் வகையிலான பொருளாக மாற்ற உதவி செய்கிறது எனக் கூறுகிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் தங்களுடைய டெக்ஜிஎம் நிறுவனம் 400இல் இருந்து 500 மாணவர்களின் ப்ராஜெக்ட்டை கையில் எடுத்து அதனை நிஜ உலகத்தில் பயன்படுத்துவதற்கான பொருட்களாக மாற்ற உதவி செய்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
பெங்களூரு 1.4 கோடி மக்கள் தொகை கொண்ட நகரம் இங்கே சுமார் 1.14 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன இதில் 77.2 லட்சம் இருசக்கர வாகனங்களும் 23.6 லட்சம் கார்களும் அடங்கும். பெங்களூரு நகரை பொருத்தவரை ஒரு ஆண்டுக்கு சராசரியாக 970 மில்லியன் மழை பொழிவை பெறுகிறது. இதன் காரணமாக லேசான மழை பெய்தால் கூட பெங்களூருவில் சாலைகளை மழைநீர் தேங்கி போக்குவரத்து பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த சூழலில் தான் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர் விஸ்வநாத் தன்னுடைய சக நண்பர்களோடு இணைந்து சாலைகளில் லிடார் சென்சார்கள் மற்றும் கேமரா மாட்யூல்கள் மூலம் எங்கெல்லாம் குழிகள் இருக்கிறது என்பதை கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிவிக்கிறார். இந்த லிடாரை ஜிபிஎஸ் உடன் இணைத்து சாலையில் எங்கெல்லாம் குழிகள் இருக்கின்றன என்பதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும் என அவர் கூறுகிறார்.
இதே போல ஒரு தானியங்கு ரோபோவை வடிவமைத்து சாலைகளில் கால்வாய்கள் சரியாக செயல்படுகின்றனவா குழாய்களில் ஏதேனும் அழைப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்பதை கூட எளிதாக கண்டறியும் கருவியையும் வடிவமைத்துள்ளனர். ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட கால்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்குள் இந்த இயந்திரங்கள் ஆய்வு செய்துவிடும் என அவர் கூறுகிறார்.சாலைகளில் மழை நீர் தேங்கும் பிரச்சனைக்கு இது மிகப்பெரிய தீர்வாக அமையும் என அவர் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications