வளரும் தென் தமிழகம்!! அனைத்து மாவட்டத்திலும் வளர்ச்சியை பரவலாக்க மாற்றி யோசித்த அரசு

சென்னை: இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து இருக்கிறது. உற்பத்தி துறை தொடங்கி தன்னுடைய முன்னோடி திட்டங்களால் பல்வேறு மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முன் உதாரணம்: ஒரு மாநிலத்தின் வளர்ச்சி குறிப்பிட்ட சில நகரங்களோடு நின்று விடக்கூடாது என்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக மாறி இருக்கிறது தமிழ்நாடு. கர்நாடக மாநிலம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பெங்களூரு மற்றும் மைசூரு ஆகிய நகரங்கள்தான். ஏனெனில் இந்த இரண்டு நகரங்களில் தான் ஐடி, ஸ்டார்ட் அப் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. அதை தாண்டி கர்நாடகாவின் மற்ற பகுதிகள் வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்றால் இல்லை .

வளரும் தென் தமிழகம்!! அனைத்து மாவட்டத்திலும் வளர்ச்சியை பரவலாக்க மாற்றி யோசித்த அரசு

ஏன் வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டும்?: தெலுங்கானா மாநிலம் என்றாலே ஹைதராபாத் நகரம் அதை தாண்டி ஏதேனும் ஒரு பகுதியை வளர்ச்சி அடைந்த பகுதியாக நம்மால் கூற முடியுமா என்றால் கிடையாது . கேரளா என்றாலே கொச்சின், திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள் தான் வளர்ச்சி அடிப்படையில் முன்னிலையில் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் மாநில அரசுகள் குறிப்பிட்ட இந்த நகரங்களின் வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை வகுக்கின்றன. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களின் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறாமல் வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏராளமானவர்கள் இந்த நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள் . இதனால் இந்த நகரங்களில் மக்கள் நெரிசல் அதிகரிக்கிறது ,இது போக்குவரத்து நெரிசல் உள்கட்டமைப்பு பிரச்சனை என பலவற்றுக்கு வித்திடுகிறது.

மாற்றி யோசித்த தமிழ்நாடு: ஆனால் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தற்போது மாற்று யோசித்து இருக்கிறது. பொதுவாகவே தமிழ்நாட்டில் தொழில்துறை என்றாலே சென்னை தான் என இருந்த நிலையை தமிழ்நாடு அரசு மாற்றி இருக்கிறது. சென்னை ,கோயம்புத்தூர் ,திருச்சி, மதுரை உள்ளிட்டவற்றை தாண்டி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் ரீதியிலான வளர்ச்சி தேவை என்பதில் அரசு தீர்க்கமாக இருக்கிறது . அந்த வகையில் தென் தமிழகத்தை குறிவைத்து அரசு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

வளரும் தென் தமிழகம்!! அனைத்து மாவட்டத்திலும் வளர்ச்சியை பரவலாக்க மாற்றி யோசித்த அரசு

தென் தமிழகம்: வளர்ச்சியை பரவலாக்கும் ஒரு முயற்சியை எடுத்து தமிழ்நாடு அரசு அதில் படிப்படியாக வெற்றி பெற்று வருகிறது . இதனை பாடமாக கொண்டு மற்ற மாநிலங்களும் அனைத்து மாவட்டங்களிலும் பொருளாதார வளர்ச்சி என்ற அடிப்படையில் திட்டம் தீட்ட வேண்டும். தமிழ்நாடு அரசை பொருத்தவரை தென் தமிழகம் துறைமுகங்கள் ரீதியிலான இணைப்பு மற்றும் விமான நிலையங்கள் ரீதியிலான இணைப்பைக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த பகுதிகள் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு காரணம் அங்கே பெரிய அளவில் தொழில் நிறுவனங்களோ உற்பத்தி ஆலைகளோ நிறுவப்படுவது கிடையாது. இந்த நிலையை தான் தமிழ்நாடு அரசு தற்போது மாற்றி வருகிறது .

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் : உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் தூத்துக்குடியில் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது . தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு மாவட்டம் தூத்துக்குடி துறைமுகமும் விமான நிலையமும் அருகிலேயே இருப்பதால் மிக எளிமையாக ஏற்றுமதி இறக்குமதியை செய்யலாம். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை தூத்துக்குடியில் நிறுவி இருக்கிறது. அதற்கு ஏற்ற நம்பிக்கையையும் வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தந்திருக்கிறது.

முதலீட்டாளர் மாநாடு: தூத்துக்குடியை தாண்டி திருநெல்வேலி ,கன்னியாகுமரி ,விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் தொழில் ரீதியாக உற்பத்தி ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்காகத்தான் தமிழ்நாடு அரசு அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு என முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது . இந்தியாவிலேயே ஒரு மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடு இது தான் என்பதே பெருமை.

50,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்: தூத்துக்குடியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 30 ,100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின . இதன் மூலம் 46,450 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன . அதேபோல MSME துறையை பொருத்தவரை கூடுதலாக இந்த பகுதியில் 1261 கோடி ரூபாயை முதலீடு செய்ய முன் வந்திருக்கிறது. இதன் மூலம் 1000 வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.

வளரும் தென் தமிழகம்!! அனைத்து மாவட்டத்திலும் வளர்ச்சியை பரவலாக்க மாற்றி யோசித்த அரசு

என்னென்ன நிறுவனங்கள்: இவ்வாறு உருவாகும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் திறன் பெற்று இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பகுதிகள் எல்லாம் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இளைஞர்களை தேடி தேடி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது . சிங்கப்பூரை சேர்ந்த ஆர்ஜிஈ நிறுவனம் தூத்துக்குடியில் 4,953 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தன்னுடைய ஆலையை நிறுவ அண்மையில் ஒப்பந்தம் செய்தது. தென் கொரியாவை சேர்ந்த Hwaseung எண்டர்பிரைசஸ் 1720 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய காலணி உற்பத்தி ஆலையை திருநெல்வேலியில் கங்கைகொண்டான் பகுதியில் அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது .

வஉசி துறைமுகம்: இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவிலான ஸ்பேஸ் பார்க் கட்டப்பட இருக்கிறது. கப்பல் கட்டும் நிறுவனங்களும் தூத்துக்குடியை நோக்கி படை எடுக்கின்றன. தூத்துக்குடியின் வஉசி துறைமுகம் இந்த நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு ஏற்ற துறைமுகமாக மாறி இருக்கிறது. பெரிய கப்பல்கள் வந்து பொருட்களை ஏற்றி இறக்கும் வகையில் தற்போது பெரிய அளவில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையமும் இதற்கு சாதகமாக இருக்கிறது.

வளரும் தென் தமிழகம்: தென் தமிழகத்தில் இப்படி உற்பத்தி ஆலைகளை நிறுவுவது பொருளாதார ரீதியாக அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும், அதே போல இங்குள்ள இளைஞர்களுக்கு அவர்கள் பகுதியிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பெரு நகரங்களை நோக்கி அவர் வர வேண்டிய தேவை இருக்காது. சொல்லபோனால் பெரு நகரங்களை சேர்ந்தவர்கள் வேலைக்காக தென் தமிழகத்தை நோக்கி செல்லும் காலமும் கூட வரலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+