1908 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டீல் கம்பெனியை உருவாக்க டாடா திட்டமிட்டது. தங்களது கனவுத் திட்டத்தை சாக்சி என்ற சிறிய கிராமத்தில் தொடங்க முடிவெடுத்து, இப்போது சாக்சி (Sakchi) சிறந்ததொரு தேர்வாக விளங்குகிறது.
வடக்கில் நிலக்கரி, தெற்கில் இரும்புத் தாது, ரயில்வே பாதைகள், அருகில் துறைமுக நகரமான கல்கத்தா இருந்தது. சாக்சியில் பெரிய நகரங்களுக்கான வசதிகள் எல்லாம் இல்லை. இருப்பினும் டாடா துணிந்து இந்த முடிவை எடுத்தது.

அவர்கள் டாடா டவுண் சர்வீஸ்கள் என்ற நிறுவனத்தை அமைத்து அதன் மூலம் அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கத் தொடங்கினர்.
அடிப்படையில் ஒரு பஞ்சாயத்து நிர்வாகம் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் டாடா செய்தது. சாக்சி இதன் மூலமாக இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரமாக உருவெடுத்தது.
இந்த நிலையில் முதலாம் உலகப் போர் மூண்டது. இதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு டாடா நிறைய ஸ்டீல்களை மிக மலிவான விலையில் ஏற்றுமதி செய்தது. இதற்கு நன்றிக்கடனாக டாடாவின் நிறுவனரான ஜாம்ஷெட்ஜியின் பெயரில் சாக்சியை பிரிட்டிஷார் பெயர் மாற்றம் செய்தனர். இப்படியாக சாக்சி, ஜாம்ஷெட்பூர் ஆனது.
கடந்த ஒரு நூற்றாண்டாக சாக்சியில் டாடா கோலோச்சுகிறது. ஜாம்ஷெட்பூர் தான் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நகரமாகும். முனிசிபல் கார்ப்பொரேஷன் நிதியில்லாமல் வசதியாக செயல்பட்டது.
ஆனால் 2018 ஆம் ஆண்டில் நிலைமை வேறு மாதிரியானது.
டாடாவுக்கு எதிராக சிலர் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தனர். காரணம் ஜாம்ஷெட்பூர் வெளியூர்க்காரர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே ஜார்க்கண்ட் மாநில அரசு ஜாம்ஷெட்பூரில் முனிசிபல் கார்ப்பரேஷனை அமைக்க முடிவு செய்தது. இதன் அதிகாரத்தை மக்களிடம் தருவதற்கும் முடிவு செய்தது.
இந்த முடிவு டாடாவுக்கு மகிழ்ச்சி தரவில்லை. இதை எதிர்ப்பது எப்படி என்று யோசிக்கத் தொடங்கியது, இந்த நிலையில் ஜாம்ஷெட்பூர் ஒரு இண்டஸ்ட்ரியல் டவுணாக அறிவிக்கப்பட்டது. இதன் படி சிறப்பு விதிகளின் கீழ் ஜாம்ஷெட்பூரை டாடா நிர்வாகம் செய்ய வழி பிறந்தது.
இருந்தாலும் இங்கு ஒரு முனிசிபல் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டு டாடாவும், அரசு நியமனதாரர்களும், உள்ளூர் வாசிகளும் அதில் இடம் பெறுவர் என அறிவிக்கப்பட்டது.
இது இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கம்பெனி டவுணின் விதியை எப்படி நிர்ணயிக்கப் போகிறது என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜாம்ஷெட்பூரின் எதிர்காலம் இப்படியாக கேள்விக்குறிக்கு ஆளாகி உள்ளது. டாடாவின் ஆதரவு இல்லாவிட்டால் அங்கு அடிப்படை வசதிகளில் பிரச்சனை ஏற்படும் என்று மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications