விண்வெளி பயணத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் இந்தியா தனக்கான இடத்தை சந்திரயான்3 மூலம் யாரும் எட்ட முடியாத உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாக இதுவரையில் எந்தொரு நாடும் அடையாத தென் துருவத்தை அடைந்தது முதல் சாப்ட் லேண்டிங்-ஐ சாத்தியப்படுத்தியது வரையில் அனைத்துமே சாதனை தான்.
இந்த நிலையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி என்றால் மிகையில்லை, சந்திரயான்-3 திட்டத்தின் ராக்கெட், ரோவர், லேண்டர், பூஸ்டர் ராக்கெட் என அனைத்திலும் கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பணியாற்றியுள்ளது. சந்திரயான் வெற்றியை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் சந்திரயான் பணியாற்றியதை பெருமைப்படும் விஷயமாக அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் டாடா குழுமத்தின் Tata Consulting Engineers Limited (TCE) என்ற நிறுவனம் சந்திரயான் 3 ராக்கெட்டின் கிரிட்டிக்கல் சிஸ்டம்ஸ் மற்றும் சம் சிஸ்டம்ஸ்-ஐ சொந்தமாகவும், தனித்துவமாகவும் தயாரித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வாகன அசம்பிளி பில்டிங் மற்றும் மொபைல் லான்ச் பெடஸ்ட்ரியல் ஆகியவற்றை தயாரித்துள்ளது.
இப்படி பல நிறுவனங்கள் சந்திரயான்-3 திட்டத்திற்கு பணியாற்றியுள்ளது. கோயம்புத்தூரில் Chakradhara Aerospace என்ற ஒரு நிறுவனம் சந்திரயான் 3 திட்டத்தில் இன்ஜின் மாடியூல், டாராக் மோட்டார்ஸ், பிரஷர் டிரான்ஸ்டியூசர்ஸ் ஆகியவைற்றை தயாரித்துக் கொடுத்துள்ளது. இது கோயம்புத்தூர் தொழிற்துறை அடையாளமாக விளங்கும் லட்சுமி மெஷின் வொர்க்ஸ்-ன் கிளை நிறுவனமாகும். இதோடு பல நிறுவனங்கள் சந்திரயான் 3 திட்டத்திற்கு உதவியுள்ளது.
L&T நிறுவனம் சந்திரயான் 3 திட்டத்தின் LVM3 M4 ராக்கெட்டில் ஹெட் எண்ட் செக்மென்ட், மிடில் செக்மென்ட் மற்றும் நோசில் பக்கெட் ஃபிளேன்ஜ் போன்ற முக்கியமான பூஸ்டர் பிரிவுகளை தயாரித்து சோதனை செய்துள்ளது.
Mishra Dhatu Nigam நிறுவனம் கோபால்ட் மற்றும் நிக்கல் அடிப்படை உலோகக் கலவைகள், டைட்டானியம் உலோகக் கலவைகள் மற்றும் LVM3/M4 ஏவுகணை வாகனத்தின் பல்வேறு கூறுகளுக்கான சிறப்பு இரும்புகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
BHEL நிறுவனம் சந்திரயான் 3 திட்டத்தின் பேட்டரி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. Hindustan Aeronautics நிறுவனம் நேஷ்னல் ஏரோஸ்பேஸ் லேப்ஸ் உடனும், எல் அண்டி டி உடனும் இணைந்து PSLV ராக்கெட்-ஐ கட்டமைத்தது.
Walchandnagar Industries நிறுவனம் LVM3 ராக்கெட்டின் முக்கியமானs200 பூஸ்டர் பிரிவு மற்றும் பல்வேறு சப்சிஸ்டம்ஸ் சந்திரயான் 3 திட்டத்திற்காக உருவாக்கியுள்ளது. MTAR Technologies நிறுவனம் சந்திரயான் 3 திட்டத்திற்காக பல்வேறு உதிரிபாகங்களை தயாரித்துக்கொடுத்துள்ளது. இப்படி பல நிறுவனங்கள் சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications