இந்தியாவில் இன்று பல வெளிநாட்டு நிறுவனங்கள் இருந்தாலும், முன்பு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உதவியுடன் தான் கார்களை தயாரித்தது. இப்படி டாடா மோட்டார்ஸ் தயாரித்த ஒரு கார் இந்தியா முழுவதும் புகழ்பெற்றது மட்டும் அல்லாமல் அனைத்து மொழி திரைப்படங்களிலும் இந்த ஒரு ஸ்பெஷலான கார் வந்துவிடும் அளவுக்கு டிரெண்டாகி இருந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுமார் 25 ஆண்டுகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருந்த ஒரு கார் 'டாடா சுமோ', இந்த கார் 2019 ஆம் ஆண்டுக்கு பின்பு தயாரிக்கப்படவில்லை, விற்பனையும் நிறுத்தப்பட்டது. TATA Sumo பெயருக்கு பின்னால் ஒரு முக்கியமான கதை உள்ளது.

1990 களின் மத்தியில் டாடா மோட்டார்ஸ் தனது முதல் டாடா சுமோ காரை அறிமுகம் செய்தது, குறைந்த காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெற்ற காரணத்தால் மூன்று ஆண்டுகளில், 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை டாடா மோட்டார்ஸ் விற்றது. இன்றைய வர்த்தக சந்தையில் 1 லட்சம் கார் விற்பனை என்பது மிகவும் சாதாரண விஷயம், ஆனால் 1990களில் இது இமாலய வெற்றி.
டாடா சுமோ என்ற இந்த பெயர் எங்கிருந்து வந்தது தெரியுமா? பலரும் இந்தப் பெயர் ஜப்பானிய சுமோ மல்யுத்த போட்டியில் ஈர்க்கப்பட்டோ, அதில் இருந்து இன்ஸ்பயராகியோ இந்த பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது ஜப்பானிய ஆட்டோமொபைல் கூட்டணியில் உருவாகியிருக்க கூடும், அதனால் இந்த பெயர் வந்திருக்க கூடும் என நினைப்பீர்கள்.
ஆனால் உண்மையில் இந்த பெயர் உருவாக முக்கிய காரணம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குனராக இருந்த சுமந்த் மூல்கோகர் (Sumant Moolgaokar) பெயரின் சுருக்கம் தான் SUMO. இவர் பத்ம பூஷன் விருது பெற்றவர் என்றாலும் இவருடைய பெயர் வைக்க என்ன காரணம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஒன்றாக மதிய உணவை சாப்பிடுவது வழக்கம், ஆனால் சுமந்த் மூல்கோகர் மதிய உணவின் போது வெளியே புறப்பட்டு சில மணி நேரம் கழித்து பணிக்கு திரும்புவார். இது வாரம், மாத கணக்கில் தொடர்ந்தது, இது பெரிய விவாத பொருளாகவே மாறியது. நிர்வாக இயக்குனர் என்பதால் சக ஊழியர்கள் உடன் சேர்ந்த சாப்பிட விரும்பவில்லை எனவும் கருத்துக்கள் நிலவியது.
சாப்பிடும் நேரத்தில் தினமும் எங்கு செல்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் சிலர் சுமந்த் மூல்கோகர்-க்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்தனர். சுமந்த்-ன் கார் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு தாபா-வில் நின்றது, இவர் தனக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு லாரி டிரைவர்கள் மத்தியில் உட்கார்ந்து சாப்பிட துவங்கினார்.

லாரி டிரைவர்கள் உடன் சாப்பிடும் போது வாகனங்களில் இருக்கும் பிரச்சனைகள குறித்து அவர்களிடம் கேட்டறிந்து, அதை எப்படி மேம்படுத்தாலம் என்பதையும் அவர்களிடமே feedback கேட்டு அதை டாடா மோட்டார்ஸ் R&D பிரிவில் சொல்லி மேம்படுத்துவாராம். சுமந்த் மூல்கோகர் தலைமையில் மோட்டார் கார்கள் மட்டும் அல்லாமல் லாரிகளின் வடிவமைப்பு தயாரிப்பு என பல பிரிவுகளில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
சுமந்த் மூல்கோகர் பணியில் காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டும் வகையில், கடினமாக உழைக்கும் அனைத்து ஊழியர்களையும் பாராட்டும் வகையில் சுமந்த் மூல்கோகர் - Sumant Moolgaokar பெயர் சுருக்கத்தை TATA SUMO என பெயரிடப்பட்டது. இந்த முடிவை எடுத்தது 1991 ஆம் ஆண்டில் டாடா சன்ஸ் தலைவராக பெறுப்பேற்ற ரத்தன் டாடா தான். டாடா மோட்டார்ஸ் முதல் டாடா சுமோ கார்-ஐ அறிமுகம் செய்தது 1994ல்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications