டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திசேகரன் பெறுப்பேற்ற போது டாடா குழுமத்தில் அதிகம் லாபம் ஈட்டு நிறுவனமாக இருந்தது அவர் தலைமை வகித்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தான்.
சந்திரசேகரன் வெளியேறிய போது மிகவும் நம்பிக்கை உடன் டிசிஎஸ் சிஇஓ பதவியை ராஜேஷ் கோபிநாதன்-க்கு கொடுத்தார். டிசிஎஸ் சிஇஓ-வாக சுமார் 6 வருடம் பணியாற்றிய நிலையில், இன்னும் 4 வருடங்கள் அவருடைய பதவி காலம் இருக்கும் வேளையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜேஷ் கோபிநாதன் தனது ராஜினாமா-வை தொடர்ந்து தனது பிற முக்கிய விருப்பத்தை தொடர்வதாக அறிவித்துள்ளார், ஆனால் அந்த வரும் டெக் துறையை சார்ந்து இருக்குமா என்பதை தெரிவிக்கவில்லை.
TCS நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் கோபிநாதன் பணியாற்றிய 6 வருட காலத்தில் செய்த முக்கிய சாதனைகள்.
ராஜேஷ் கோபிநாதன்
ராஜேஷ் கோபிநாதன் நிர்வாகத்தின் கீழ் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, இதேபோல் லாபம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்தை விடவும் முக்கியமாக டிசிஎஸ் பங்கு மதிப்பு 3 மடங்கு உயர்ந்துள்ளது.
கிருதிவாசன்
ராஜேஷ் கோபிநாதன் டிசிஎஸ் நிறுவனத்தில் பதவியை ராஜினாமா செய்தாலும் செப்டம்பர் 15 வரையில் இப்பதவியில் இருப்பார், இக்காலக்கட்டத்தில் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ள கிருதிவாசன் நிர்வாகத்தை கையில் எடுக்க உதவி செய்ய உள்ளார். 2017ல் என் சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவார நியமிக்கப்பட்ட போது இவருடைய பதவி ராஜேஷ் கோபிநாதன்-க்கு கொடுக்கப்பட்டது.
உயர்மட்ட நிர்வாக மறுசீரமைப்பு
என் சந்திரசேகரன் தலைமையை காட்டிலும் ராஜேஷ் கோபிநாதன் தலைமையிலான குழு வேகமாக இயங்க துவங்கியது. இப்பதவிக்கு வந்த சில நாளிலேயே உயர்மட்ட நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்தார், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஸ்டார்ட்அப் முதல் பெரிய கார்ப்ரேஷன் நிறுவனங்கள் உடன் இயங்கும் வகையில் கட்டமைப்பை உருவாக்கினார்.
50 பில்லியன் டாலர் இலக்கு
இதிலும் முக்கியமான ராஜேஷ் கோபிநாதன் தலைமை நிர்வாகம் கிளவுட் சேவை, டிஜிட்டல் சேவை பிரிவில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. ராஜேஷ் கோபிநாதன் 2030க்குள் 50 பில்லியன் டாலர் வருடாந்திர வருமானம் கொண்ட நிறுவனமாக உயர இலக்கு நிர்ணயம் செய்தார், 2022 மார்ச்-ல் டிசிஎஸ் 25.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது.
கொரோனா தொற்று காலம்
இதற்கிடையில் கொரோனா தொற்று காலத்தில் அதிகப்படியான வர்த்தகம், இயக்க பாதிப்புகள் இருந்தது. இது மட்டும் அல்லாமல் அதிகப்படியான செலவுகளும் இருந்தது, இதனால் டிசிஸ் வளர்ச்சி வேகம் கணிசமாகவே குறைந்தது.
டிசிஎஸ் பங்கு மதிப்பு வளர்ச்சி
ராஜேஷ் கோபிநாதன் டிசிஎஸ் நிர்வாகத்தை கையில் எடுத்த 2017 பிப்ரவரி மாதத்தின் போது டிசிஎஸ் நிறுவன பங்குகள் 1116 ரூபாய் வர்த்தகம் செய்யப்பட்டது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 3,182 ரூபாய். இது கிட்டதட்ட 185 சதவீத வளர்ச்சியாகும்.
3968 ரூபாய் வரை உயர்வு
ஆனால் டிசிஎஸ் பங்குகள் ராஜேஷ் கோபிநாதன் நிர்வாக காலத்தில் அதிகப்படியாக 3968 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதை வைத்து கணக்கிட்டால் 255 சதவீத உயர்வாகும். இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் 0.31 சதவீதம் சரிந்து 3,175 ரூபாயாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் டிசிஎஸ் பங்குகள் 2.66 சதவீத சரிவில் உள்ளது.
ஈவுத்தொகை
ராஜேஷ் கோபிநாதன் நிர்வாக காலத்தில் டிசிஎஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 352.50 ரூபாய் ஈவுத்தொகை அளிக்கப்பட்டு உள்ளது. 2018ல் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமா டிசிஎஸ் தனது சிறப்பான நிதி நிலையை அடிப்படையாக 3 முறை பைபேக் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018ல் 16000 கோடி ரூபாய், 2020ல் 16000 கோடி ரூபாய், 2022ல் 18000 கோடி ரூபாய்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications