ஒரு அரசு ஊழியரின் பல ஆண்டு கால உழைப்பிற்கு மிகச்சிறந்த அங்கீகாரம் என்பது, அவரது பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே 8-வது ஊதியக்குழு (8th Pay Commission) குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இது வெறும் சம்பள உயர்வு குறித்து மட்டுமல்ல, ஒரு ஊழியரின் வாழ்நாள் கனவான பதவி உயர்வு மற்றும் பணி ஓய்விற்கு பிந்தைய கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் ஒரு பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

8-வது ஊதியக் குழுவானது விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த குழுவின் பரிந்துரைகளில் ஒவ்வொரு ஊழியரின் சேவை காலத்தில் குறைந்தது 5 பதவி உயர்வுகள் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இது குறித்து கடந்த பிப்ரவரி 25 அன்று, நடைபெற்ற முக்கிய ஆலோசனை குழு கூட்டத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கொள்கை மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக இக்கூட்டத்தில் ஊழியர்களின் பணி காலத்தில் ஒவ்வொரு ஊழியரும் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள முறையில் ஒரே பதவியில் பல ஆண்டுகள் ஊழியர்கள் முடங்கி கிடக்கின்றனர். இதன் மூலம் ரயில்வே துறை, அஞ்சல் துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல முக்கிய துறை சார்ந்த ஊழியர்களுக்கு முறையான கால இடைவெளியில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இது ஊழியர்களின் சம்பள விகிதத்தை மட்டுமல்ல, அவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ரயில்வே, ராணுவம், அஞ்சல் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களும், அடுத்த 10 - 15 நாட்களுக்குள் தங்களின் அதிகாரப்பூர்வ கோரிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளன. அனைத்து சங்களின் கோரிக்கையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது 8வது ஊழிய குழுவின் தலைவரான ரஞ்சனா பிரகாஷ் தேசாயிடம் சமர்பிக்கப்பட உள்ளது. மார்ச் 10-க்கு பிறகு நடைபெறவுள்ள கூட்டத்தில், இந்து குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சீக்கிரமோ சூப்பர் வரலாம்...
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications