8-வது ஊதியக் குழுவில் உங்கள் சம்பளம் எவ்வளவு உயரும்..? வருமான வரி எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்..?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி விரைவில் காத்திருக்கிறது. மத்திய அரசு விரைவில் 8-வது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமல்படுத்த உள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது, அரசு ஊழியர்களின் சம்பளம் மிகப் பெரிய அளவில் உயரப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சம்பளம் உயரும் அதே வேளையில், ஊழியர்களின் மீது விழும் வருமான வரிச் சுமையின் தாக்கமும் அதிகரிக்கும். இந்த மாற்றம் மூலம் உங்கள் கையில் எவ்வளவு பணம் கிடைக்கும், எவ்வளவு வரிக்குப் போகும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

உங்கள் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை ஒரு உதாரணம் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் இப்போது லெவல் 8 என்ற பிரிவில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அடிப்படை சம்பளம் (Basic Salary) இப்போது ரூ.47,600 என்று வைத்துக்கொள்வோம்.

8-வது ஊதியக் குழுவில் உங்கள் சம்பளம் எவ்வளவு உயரும்..? வருமான வரி எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்..?

8-வது சம்பள கமிஷன் வரும்போது, உங்கள் சம்பளத்தை உயர்த்த, 1.92 என்ற ஒரு சிறப்பு எண்ணை (Fitment Factor) உங்கள் அடிப்படை சம்பளத்துடன் பெருக்க வேண்டும். அப்படிப் பெருக்கினால், உங்கள் புதிய அடிப்படை சம்பளம் ரூ.91,392 ஆக மாறும்.

இந்த புதிய அடிப்படை சம்பளத்துடன், உங்களுக்குக் கிடைக்கும் மற்ற படிகளும் (அலவன்ஸ்கள்) உயரும். நீங்கள் டெல்லி, மும்பை அல்லது பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் வேலை செய்தால், உங்களுக்கு வீட்டு வாடகைக்காக, அடிப்படை சம்பளத்தில் 30% பணம் கிடைக்கும். அதாவது, ரூ.27,418 உங்களுக்கு வீட்டு வாடகைப்படியாக கிடைக்கும். அதோடு, நீங்கள் பயணம் செய்ய ரூ.3,600 கிடைக்கும்.

கைக்கு வரும் பணம் எவ்வளவு..?: இந்த எல்லாப் பணத்தையும் கூட்டினால், உங்கள் மொத்த சம்பளம் மாதம் ஒன்றுக்கு ரூ.1,22,410 என்ற அளவில் இருக்கும். அதாவது, உங்கள் சம்பளம் கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு ரூ.75,000 வரை அதிகமாகும். உங்கள் மொத்த சம்பளம் ரூ.1.22 லட்சம் என்றாலும், அதில் சில பணத்தை கட்டாயமாகப் பிடித்தம் செய்வார்கள்.

ஓய்வூதியத் திட்டத்துக்கு சுமார் ரூ.9,139 பிடித்தம் செய்யப்படும், அரசு மருத்துவத் திட்டத்துக்கு ரூ.650, வருமான வரி தோராயமாக ரூ.7,700 பிடித்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கட்டாய பிடித்தங்கள் அனைத்தும் போக, உங்கள் கையில் கிடைக்கும் சம்பளம் மாதம் ஒன்றுக்கு தோராயமாக ரூ.1,04,900 ஆக இருக்கும்.

சம்பளம் உயர்வது உங்களுக்குப் பெரிய சந்தோஷத்தை கொடுத்தாலும், அதிக சம்பளம் வாங்குவதால் அதிக வரி கட்ட வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால், இந்த சம்பள உயர்வு வந்த பிறகு, நீங்கள் எப்படி வரியைச் சேமிக்கலாம் என்று இப்போதே திட்டமிடுவது புத்திசாலித்தனம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+