ஒருவர் இளமைப் பருவத்தில் இருந்தே ஓய்வுக்காக திட்டமிட வேண்டும். அப்பொழுது தான் முதுமைக் காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் தங்கள் சொந்த கையை நம்பி வாழ முடியும். அதற்கு சரியான திட்டமிடல் முக்கியம். நீங்கள் ஓய்வுக்காக "FIRE" என்ற யுக்தியைப் பயன்படுத்தலாம். FIRE என்றால் என்ன? அதை எப்படி ஓய்வூதிய திட்டமிடலுக்கு பயன்படுத்த வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
F.I.R.E பிளான் என்றால் என்ன?: FIRE என்பதற்கான அப்ரிவேஷன் "Financial Independence and Retire Early" என்பதாகும். ஓய்வுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்து வெகுவிரைவில் நிதி சுதந்திரத்தை அடையும் முறையாகும். இந்த முறையை பயன்படுத்தி சேமிக்க தொடங்கினால் ஓய்வு காலத்தை திறம்பட கழிக்க முடியும்.

FIRE பிளான் என்பதன் நோக்கம் என்ன?:
நிதி சுதந்திரம்: ஆரம்பத்தில் ஓய்வு பெறுவதற்கு போதுமான பணத்தை சேமிக்க வேண்டும்.
ஆரம்ப ஓய்வு: வழக்கமான ஓய்வு வயதிற்கு முன்பே ஓய்வுக்கு தேவையான தொகையை சேமிப்பதை குறிக்கிறது. அதாவது உங்களுடைய 50 வயதுக்கு முன்பே நிதி சுதந்திரம் அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
FIRE பிளானைப் பயன்படுத்தி எவ்வாறு சேமிப்பது?:
அதிக சேமிப்பு: மாதந்தோறும் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50% அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை சேமிக்க வேண்டும்.
சிக்கனமான வாழ்க்கை: குறைந்தபட்ச வாழ்க்கை முறையை பின்பற்றி, அதிக சேமிப்பு செய்ய வேண்டும். உங்களுடைய தேவை மற்றும் விருப்பம் ஆகியவற்றை புரிந்து செலவு செய்வதன் மூலம் மாதம் மாதம் கணிசமான தொகையை சேமிக்க முடியும். விருப்பத்திற்கு செலவு செய்யாமல் தேவையை உணர்ந்து செலவு செய்வதனால் மாத செலவில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
நேரடியான முதலீடுகள்: நேரடி முதலீடுகளில் முதலீடு செய்யலாம். மேலும் முதலீடு செய்யப்படும் தொகைக்கு லாபகரமான வருமானம் கிடைக்கும் என்பதை உறுதி செய்து கொள்ளவும். உதாரணமாக சொல்லப்போனால் வாடகை வீடுகளை கட்டலாம். இதன் மூலம் மாதம் மாதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
'FIRE' முறையின் கீழ் எவ்வளவு சேமிக்க வேண்டும்?: இந்த FIRE பிளானின் கீழ் சேமிக்க விரும்புபவர்கள் ஓய்வுக்கு பின்னர் 1 ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்ய இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஓய்வுக்குப் பிறகு முதல் ஆண்டில் உங்களுக்கு மாதம் 1 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியானால் உங்களுக்கு 1 ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் தேவைப்படலாம். இந்த "FIRE" பிளானின் கீழ் சேமிக்க விரும்புபவர்கள் முதல் ஆண்டில் தேவைப்படும் தொகையிலிருந்து 25 மடங்கு அதிகமாக சேமிக்க வேண்டும். அதன்படி 12 லட்சம் * 25 = 3 கோடி கிடைக்கும். அப்படியானால் நீங்கள் 3 கோடி ரூபாயை சேமித்து நிதி சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஓய்வுக்காக சேமிக்க விரும்புபவர்கள் இது போன்ற பல பிளான்களை பயன்படுத்தி சேமிக்கலாம் உதாரணமாக த்ரீ பக்கெட் பிளான் என்று என்பதும் ஓய்வுக்காக சேமிப்பதை நோக்கமாகக் கொண்டது. அதேபோல இந்த "FIRE" பிளானையும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த ஃபயர் பிளானின் மூலம் ஓய்வுக்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தொகையை சேமிக்க விரும்புகிறீர்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதை தான் மேலே குறிப்பிட்டுள்ள பேராவில் பார்த்தோம். இது போன்ற முறைகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓய்வுக்காக சேமிக்க முடியும். இதனால் ஓய்வு காலத்தில் எந்தவித நிதி சிக்கலும் இல்லாமல் வாழ்வதை உறுதி செய்யலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications