மும்பை: இந்தியாவில் சரக்கு வாகனங்கள் மற்றும் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் என்றென்றும் முன்னிலையில் இருக்கிறது. இதற்கு காரணமாக அமைந்தது 1954ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸுக்கும் பென்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி தான்.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்த நிறுவனம் கார், லாரி , வேன் மற்றும் பேருந்து உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1945 ஆம் ஆண்டு முதன் முதலில் மும்பையை தலைமை இடமாக கொண்டு ஜேஆர்டி டாடாவால் நிறுவப்பட்டது. முதலில் டெல்கோ என்று தான் இது அறியப்பட்டது. 1945 ஆம் ஆண்டு ரயில் வண்டிகளை தயாரிக்கும் நிறுவனமாக தான் தொழிலை தொடங்கியது. அப்போது இந்தியாவில் சரக்கு வாகனங்களுக்கான தேவை இருப்பதை உணர்ந்த டாடா குழுமம், சரக்கு வாகன தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தது.
அந்த சமயத்தில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் டாடா மோட்டார்ஸுக்கு உதவிக்கரம் நீட்டியது. இதன்படி 1954 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸுக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் டாடா மெர்சிடிஸ் என்ற கூட்டு நிறுவனத்தை அமைத்து சரக்கு வாகன தயாரிப்பை தொடங்கின.
இந்தியாவில் ஜாம்ஷெட்பூரில் ஆலை அமைக்கப்பட்டது. ஆலை அமைத்து 6 மாத காலத்திலேயே வர்த்தக ரீதியிலாக பயன்படுத்துவதற்கான முதல் சரக்கு லாரியை அறிமுகம் செய்தனர். டாடா மெர்சிடிஸ் டீசல் டிரக் என்ற பெயரில் லாரி விற்பனைக்கு வந்தது. இதற்கு இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 15 ஆண்டுகளாக இந்தியாவில் சரக்கு போக்குவரத்துக்கு உதவக்கூடிய வகையில் லாரிகளை தயாரித்து விற்பனை செய்தன . கால மாற்றத்திற்கு ஏற்ப புது தொழில்நுட்பங்களையும் புது மாடல் லாரிகளையும் விற்பனைக்கு கொண்டு வந்தன. 15 ஆண்டுகளுக்கு பின் இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
பின்னர் 1994 ஆம் ஆண்டில் மீண்டும் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸுக்கான கார்கள் தயாரிப்பில் ஈடுபட தொடங்கின . அப்படித்தான் 1995ஆம் ஆண்டு இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈ20 கார் விற்பனைக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் , பென்ஸ் நிறுவனமும் பிரிந்துவிட்டன. இரண்டு நிறுவனங்களும் தற்போது தனித்தனி நிறுவனங்களாகவே செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும் 1954ஆம் ஆண்டு இந்த நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சி தான் இந்தியாவில் வாகன உற்பத்தி துறைக்கு முன்னோடியாக அமைந்தது. பல்வேறு நிறுவனங்களும் வெற்றிகரமாக இந்த துறையில் கால்பதிக்க வலுவான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி தந்தது என்பதை மறுக்க முடியாது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications