இந்திய ரிசர்வ் வங்கி ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும், இந்திய பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைக்கவும், நாட்டின் பணவீக்கம், நாணய புழக்கம், நிதி சந்தையை கட்டுப்படுத்தும் முக்கிய பணிகளை செய்து வருகின்றனர். இருப்பினும் 2023 ஆம் நிதியாண்டில் அது ரூ.2.20 லட்சம் கோடி லாபத்தைப் பார்த்தது.
இது எப்படி சாத்தியமானது? இதற்குப் பெயர்தான் Seigniorage. அதாவது கரன்சியை அச்சடிப்பதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் லாபம் இது. கரன்சி அச்சடிப்பதற்கு ஆன செலவுக்கும் கரன்சியின் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம்.

இந்திய ரிசர்வ் வங்கி ஒரு 100 ரூபாய் தாளை அச்சடித்து அதை புழக்கத்தில் விடுவதற்கு ஒரு வங்கிக்குத் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வங்கி கரன்சி நோட்டை விலைக்கு வாங்கி அதன் முழு மதிப்பான ரூ.100க்கு மாற்றி ரிசர்வ் வங்கிக்குத் தர வேண்டும். ஆனால் அந்த நோட்டை அச்சடிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு வெறும் ரூ.2 தான் செலவானது.
ஆகவே ரிசர்வ் வங்கி ரூ.2 செலவழித்து அதை ரூ.100 நோட்டாக மாற்றியதால் வங்கிக்கு லாபம் கிடைக்கிறது. இந்த லாபம் தான் Seigniorage.
இந்த லாபத்தை வைத்து ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? : இந்த லாபத்தை வங்கிகளுக்கு கடன் அளிக்கும். அரசு பாண்டுகளை விலைக்கு வாங்கும். அமெரிக்க அரசு பாண்டுகள் போன்ற வெளிநாட்டு சொத்துகள் மீது முதலீடு செய்யும். அல்லது ரிசர்வ் வங்கி டாலர்களை வாங்கி வைத்துக் கொள்ளும். எப்போதெல்லாம் டாலர் மதிப்பு கூடுகிறதோ அப்போது அதை மாற்றி லாபத்தை எடுத்துக் கொள்ளும்.
சொல்லப்போனால் கடந்த ஆண்டில் இப்படி டாலர்களை வாங்கி வைத்து விற்றதன் மூலமே ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ரிசர்வ் வங்கி லாபம் பார்த்தது. ரிசர்வ் வங்கிக்கு கூடுதலாக வேறு செலவுகளும் இல்லை.
கரன்சி அச்சடிக்கும் செலவு மட்டுமே உள்ளது. இதனுடன் சில அரசு சார்ந்த வேலைகளை வங்கிகளுக்கு அளிக்கும். அதற்காக ஒரு கட்டணத்தையும் தரும்.
இறுதியாக ரிசர்வ் வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சம்பளம் தரும். இதை சேர்த்துப் பார்த்தால் வெறும் ரூ.15,000 கோடிதான் செலவே. ரிசர்வ் வங்கி ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு என்பதால் அது வருமான வரி கட்டத் தேவையில்லை.
அப்படியென்றால் இந்த லாபத்தை வைத்து அது என்னதான் செய்யும்?
லாப பணத்தை அது தொகுப்பு நிதிக்குத் தந்துவிடும். பொருளாதாரத்தில் ஏதாவது அசாதாரண விளைவுகள் ஏற்பட்டால் அப்போது இந்தப் பணத்தைப் பயன்படுத்தும்.
இதுப்போக ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தொகையை தாண்டி கூடுதல் தொகை இருப்பின் அப்பணத்தை அரசுக்கு டிவிடெண்டாகத் தந்து விடும். இதன் மூலம் மத்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் வருமானத்தை பெறுகிறது.
இதை தாண்டி வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளை நிர்வாகம் செய்யும் ஆர்பிஐ, அவை விதிமுறை மீறல்கள், உரிய நேரத்தில் தகவல் பரிமாற்றம் செய்யமால் இருப்பது போன்ற பல்வேறு பிரிவின் கீழ் அபராதம் விதித்து வசூலித்து வருகிறது. இதுவும் ஆர்பிஐ-க்கு கிடைக்கும் ஒருவகையாக வருமானம் தான்.


Click it and Unblock the Notifications