பலரும் பணியில் இருக்கும் போதே ஒரு முறையாவது சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று சிந்தித்திருப்போம். அதுவும் சிலர் IT தொழிலை விட்டு விவசாயம், முத்து வளர்ப்பு, காளான் வளர்ப்பு என தங்களுடைய தொழிலை வெவ்வேறு பக்கம் திசை திருப்பி இன்று மாதம் இலட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர். அப்படித்தான் சஞ்சீவ் என்ற நபரும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து தற்போது மீம்ஸ் மூலம் லட்சங்களில் வருமானம் பெற்று வருகிறார்.
மீம்ஸ் என்பது பலரும் ரசிக்கக் கூடிய ஒன்று. ஒரு நபர் மனவேதனையில் இருந்தாலும் நகைச்சுவையூட்டும் மீம்சை பார்த்தால் மனம் லேசாகிவிடும். அந்த அளவுக்கு மீம்ஸ்களுக்கு ஃபேன் பேஸ் உள்ளது. இதைத் தெரிந்து கொண்ட ஒருவர் இதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்.

சஞ்சய் என்ற டெக்கி "Supermeme.ai" என்ற பிளாட்பார்மை நிறுவிய நிறுவனர் ஆவார். வெற்றிகரமாக ஒரு சாப்ட்வேரை தயாரித்து தற்போது அதை ஒரு வணிகம் ஆக்கி, அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். தற்போது சஞ்சீவ் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஹெட்-ஆக பணிபுரிந்து வருகிறார். அதோடு சூப்பர் மீம்ஸ் AI என்ற தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த தளத்தை பயன்படுத்தி ஒருவர் எளிதாக மீம்ஸ்களை உருவாக்க முடியும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் பல்வேறு பணிகளை செய்து வந்த சஞ்சீவ், மார்க்கெட்டிங் கன்டென்டுகளை உருவாக்கும் போது அவை ஒரே மாதிரியானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்ததாகவும் இருப்பதை கண்டறிந்துள்ளார்.
எனவே நகைச்சுவை உணர்வையும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் திறனையும் அதிகரிக்க மீம்ஸ்-களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். ஆனால் அவற்றை உருவாக்குவது ஆரம்ப காலத்தில் அவருக்கு சவாலானதாக இருந்துள்ளது. ஏனெனில் சரியான மீம் டெம்ப்ளேட்டை கண்டுபிடிப்பது அதற்கு பொருத்தமான கேப்ஷன்களை எழுதுவது அப்போது கடினமாக இருந்தது. இந்த அனுபவத்திலிருந்து தான் சஞ்சீவ் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீம்ஸ் உருவாக்கும் யோசனையை பெற்றுள்ளார்.
இவர் அவ்வப்போது தனது லிங்க்டின் பக்கத்தில் மீம்ஸ்களை பகிர்ந்துள்ளார். அப்போதுதான் சஞ்சீவ் ராம் ஸ்ரீ என்ற நபரை நபர் தொடர்பு கொண்டுள்ளார். ஏனெனில் அவருக்கும் மீம்ஸ் ஜெனரேட்டரில் பணிபுரிய ஆர்வம் இருந்துள்ளது. அதோடு நிக்கோ என்ற நபரும் இணைந்து சூப்பர்மீம் ஏஐ என்ற தளத்தை உருவாக்க தொடங்கியுள்ளனர்.
சூப்பர் மீம் தளத்தை பயன்படுத்துவதற்கான விலை எவ்வளவு?: சூப்பர் மீம் தளத்தை தனிப்பட்ட நபர்கள் மாதம் 6 டாலர் செலுத்தி பயன்படுத்தலாம்/ வணிகங்களுக்கு பயன்படுத்த மாதத்திற்கு 90 டாலர் செலுத்த வேண்டும். தற்போது சூப்பர் மீம் 110-க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இது பல்வேறு டெம்ப்லேட்களை வழங்குகிறது. தற்போது இந்த தளத்தை பயன்படுத்தி சஞ்சீவ் 80 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பார்த்து வருகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications