பெரம்பூர், சென்னை: இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒரு பெண் சுயதொழில் செய்து முன்னேறுவது அத்தனை எளிதானது கிடையாது. நிதி தொடங்கி நெட்வொர்க்கிங் வரை அனைத்திலும் பல்வேறு தடைகளை தாண்டி தான் வெற்றி பெற வேண்டும். இப்படி சாதிக்க துடிக்கும் பெண்களுக்காக தொடங்கப்பட்டது தான் WEDO அமைப்பு.
WEDO (Women Entrepreneurship Development Organisation) எனப்படும் பெண்கள் சுய தொழில் மேம்பாடு எனப்படும் அமைப்பை நிறுவி 35 ஆயிரம் பெண்கள் சுய தொழில் செய்வதற்கு உதவியாக இருந்திருக்கிறார் காதம்பரி உமாபதி. கடந்த 2015 ஆம் ஆண்டில் சென்னை அருகே பெரம்பூரை தலைமை இடமாக கொண்டு இந்த அமைப்பை தொடங்கினார். இவருடைய நோக்கமே சுய தொழில் புரிய விரும்பும் பெண்களுக்கு அதற்கான பாதையை வகுத்து தருவதுதான்.

தொடங்கப்பட்ட இந்த பத்து ஆண்டுகளில் இந்த அமைப்பு 35 ஆயிரம் பெண்கள் சுய தொழிலில் வெற்றிகரமாக இயங்குவதற்கு உதவி செய்திருக்கிறது. 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய ஒரு அமைப்பாக மாறி இருக்கிறது. அது மட்டும் இன்றி தமிழ்நாடு மட்டும் இல்லாமல் நாடு முழுவதிலும் இருக்கும் பெண்கள் சுயதொழில் புரிவதற்கு தேவையான அனைத்து வகையான ஆதரவுகளையும் வழங்குகிறது.
இந்த அமைப்பினை பொருத்தவரை சந்தா அடிப்படையில் பெண்கள் இதில் சேர்ந்து கொள்ள வேண்டும். அடிப்படை உறுப்பினர் கட்டணமாக 500 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது இதில் சேரும் பெண்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி வழங்கப்படுவதாக காதம்பரி கூறுகிறார். இந்த தொழில் பயிற்சியில் ஒரு தொழிலை அடிப்படையில் இருந்து எப்படி தொடங்க வேண்டும், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, ஜிஎஸ்டி விதிமுறைகள் மற்றும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பன உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அண்மையில் கூட இந்த அமைப்பு சார்பாக நைஜீரியாவில் ஒரு மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்தியா ,மலேசியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள் சந்திப்பதற்கான வாய்ப்பாக அது அமைந்ததாக கூறுகிறார். பெண்கள் சுய தொழில் செய்ய தொடங்கும் போது என்னென்ன தடைகளை சந்திக்கிறார்களோ அவற்றையெல்லாம் தகர்த்து வெளியே வரும் வகையிலான பயிற்சிகளும் உதவிகளும் தங்களுடைய நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுவதாக காதம்பரி கூறுகிறார்.
தங்களுடைய அமைப்பின் ஆதரவின் மூலம் சுயதொழில் தொடங்கிய பல பெண்களும் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அதனை வெற்றிகரமாக கொண்டு வந்துள்ளனர் என அவர் கூறுகிறார். தன் வாழ்வில் இரண்டு தொழில்களை தொடங்கி அதில் ஏற்பட்ட தோல்விதான் தன்னை பெண்களுக்கான சுயதொழில் மேம்பாட்டு அமைப்பை நிறுவுவதற்கு ஊக்குவித்தது எனக் கூறுகிறார்.
பெங்களூருவில் 21 நாட்கள் தொழில் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறும்போது என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறார்கள் அவற்றை கடந்து அவர்களை வெற்றி பெறச் செய்வது எப்படி என சிந்தித்து அதற்கான ஒரு அமைப்பாக WEDO (Women Entrepreneurship Development Organisation)வை உருவாக்கியதாக கூறுகிறார்.
தற்போதைக்கு இந்த அமைப்பு இந்தியா, நைஜீரியா , மலேசியா ஆகிய நாடுகளில் செயல்படுகிறது, கூடிய விரைவில் இதனை 20 நாடுகள் வரை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications