இந்தியாவில் தற்போது சுயதொழில் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சுய தொழிலில் சாதித்த ஒரு இளைஞரை பற்றி இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியை சேர்ந்த இளைஞர் தான் அருண் சர்மா. எம்.பி.ஏ பட்டப்படிப்பை முடித்தவர்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் கோடிக்கணக்கிலான சம்பளத்திற்கு வேலைக்கு சென்று விடுவார்கள்.
ஆனால் அருண் சர்மா தன்னுடைய சொந்த ஊரிலேயே ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என விரும்பினார். இதன் காரணமாக முதலில் ஜம்மு காஷ்மீரில் கதுவா நகரிலேயே தங்கியவர் ஒரு அரசு சாராத நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பல்வேறு நலப் பணிகளை செய்து வந்தார். அப்படி ஜம்மு காஷ்மீர் அரசு பெண்கள் சுய தொழில் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் பெண்களுக்கு காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சியினை அளித்தது.

இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக அருண் சர்மா செயல்பட்டார். இந்த திட்டத்தின் மூலம் அவருக்கு காளான் வளர்ப்பு குறித்தும் அதனை சந்தைப்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது குறித்தும் தகவல்கள் கிடைத்தன. அவர் சோதனை முறையில் உள்ளூர் விற்பனையாளிடமிருந்து 100 காளான் பைகளை வாங்கினார்.
இதற்காக அவர் ஒரு பைக்கு 90 ரூபாய் என 9,000 ரூபாயை செலவிட்டார். இதனை குறிப்பிட்ட வெப்ப நிலை கொண்ட அறைகளில் வைத்து வளர்த்தார். இரண்டு மாதங்களுக்கு பிறகு அவர் 16,000 ரூபாய்க்கு அந்த காளான்களை விற்பனை செய்தார். இதுதான் அவருக்கு இந்த தொழில் குறித்து நம்பிக்கை அளித்தது.
2014 ஆம் ஆண்டு என்ஜிஓ பணியை கைவிட்ட அவர் முழு நேரமாகவே காளான் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினார். வீட்டுக்கு அருகே இருந்த ஒரு பழைய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த அவர் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். 2015 ஆம் ஆண்டில் 7 லட்சம் ரூபாய்க்கு வங்கி கடன் பெற்ற அவர் தன்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் சேமிப்பு தொகை ஆகியவற்றையும் இணைத்து ஆயிரம் சதுர அடி அளவில் ஒரு வீட்டினை வாங்கிஅங்கே 2 ஏசியை அமைத்தார். அந்த அறையில் காளான் வளர்ப்பில் ஈடுபட தொடங்கினார். இதன் மூலம் அவரது அவர் ஆண்டுக்கு 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற்றார்.

படிப்படியாக அவரது நிறுவனம் உயர்ந்தது 2017 ஆம் ஆண்டில் அவரது நிறுவனம் 32 லட்சம் ரூபாய் என மாறியது. 2019 ஆம் ஆண்டில் அவர் காளான் உரம் தயாரிப்பிலும் ஈடுபட தொடங்கினார். அதன் மூலமும் அவரது வருமானம் அதிகரித்தது . தற்போது அருண் 4 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 15 ஒப்பந்த ஊழியர்கள் கொண்டு தன்னுடைய காளான் வளர்ப்பு தொழிலை செய்து வருகிறார்.
கதுவா, ஜம்மு மற்றும் பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் இவரது காளான் விற்பனையாகிறது. தற்போது இவரது நிறுவனம் ஆண்டுக்கு 90 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 35 டன்கள் காளானை இவர் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications