இந்தியாவில் குறிப்பிட்ட சில மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை தந்துள்ளன. குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் இவற்றில் முதலீடு செய்த பலரும் தங்கள் முதலீட்டை விட பல மடங்கு லாபத்தை பெற்றுள்ளனர்.
பொதுவாக பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்யும் அளவிற்கு நேரமோ பொறுமையோ கிடையாது என எண்ணுபவர்கள் இது போன்ற மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் அந்த பணத்தை மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை என எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம்.

அந்த மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் அவற்றை பங்கு சந்தையில் முதலீடு செய்யும். மியூச்சுவல் ஃபண்ட் மதிப்பு உயர உயர நாம் முதலீடு செய்திருக்கும் யூனிட்டுக்களின் மதிப்பும் உயரும். இது நமக்கு நீண்ட காலத்தில் பெரிய அளவிலான லாபத்தை தருகிறது .
இந்தியாவில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் அண்மைக்காலமாகவே பெருமளவிலான லாபத்தை ஈட்டுபவையாக அமைந்துள்ளன அப்படி ஒரு திட்டம்தான் நிப்பான் இந்தியா நிறுவனத்தின் ஸ்மால் கேப் ஃபண்டு. தற்போது இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 61,646 கோடி ரூபாய் பணமானது மேலாண்மை செய்யப்படுகிறது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் பெரும்பாலும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
கடந்த 14 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் ஃபண்டு ஆண்டுக்கு 22.22% என லாபம் தந்துள்ளது. இது பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டி 250ஐ விட அதிக லாபம் தந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர் . கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் தான் நிப்பான் இந்தியா நிறுவனம் இந்த ஸ்மால் கேப் ஃபண்டை அறிமுகம் செய்தது. இந்த 14 ஆண்டுகளில் தொழில்துறை மற்றும் நிதி துறை சார்ந்த இயங்கக்கூடிய நிறுவனங்களில் இது முதலீடு செய்திருக்கிறது .
கடந்த ஓராண்டு காலத்தில் இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டமானது 31.10 சதவீத லாபத்தையும் ,கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 29.26 சதவீதம் லாபத்தையும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் 35.76% லாபத்தையும் தந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டமானது 22.33% லாபத்தை ஈட்டி தந்துள்ளது.
இந்த திட்டம் முதன் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரையிலான இந்த 14 ஆண்டுகளில் மாதம் தோறும் 9000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் அவர்கள் முதலீட்டின் மதிப்பு தற்போது 1.14 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும். இந்த திட்டத்தில் 10,000 ரூபாயை ஒருமுறை முதலீடாக தொடக்கத்தில் முதலீடு செய்திருந்தால் 14 ஆண்டுகளில் இதன் மதிப்பு 1,10,000 ரூபாய் என உயர்ந்திருக்கும்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications