தமிழ்நாட்டின் அடுத்த புரட்சி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் தான் இருக்கும் என அனைவராலும் கணிக்கப்பட்டு உள்ளது, இவ்விரு துறைகளிலும் தமிழ்நாடு ஏற்கனவே முன்னோடியாக இருக்கும் வேளையில் இத்துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்று மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பாதையை இவ்விரு துறையை வைத்து உருவாக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளது.
இந்திய நிலையில் இன்று தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய 3 இடத்தில் மின் டைடல் பார்க் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த 3 மாவட்ட டைடல் பார்க் சுமார் 92.50 கோடி ரூபாயில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருக்கும் டைடல் பார்க் உருவாக்கியதன் மூலம் இந்தியாவில் ஐடி சேவை புரட்சிக்கு வித்திட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்தது. இந்த பாதையில் பெரு நகரங்களை தாண்டி 2ஆம், 3ஆம் தர நகரங்களில் மினி அதாவது சிறிய டைடல் பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இது புதிதாக துவங்கும் அல்லது பிற மாநிலங்களில் இருக்கும் டெக் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய நம்பிக்கையை கொடுக்கும். மேலும் இந்த டைடல் பார்க்-கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நம்மை அளிக்கும்.
அனைத்திற்கும் மேலாக 2 ஆம், 3 ஆம் தர நகரங்களில் அதிக வருமானம் அளிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அப்பகுதி மக்களை உள்ளூரிலேயே இருக்கும் வாய்ப்பை அளிக்கும். மேலும் இப்பகுதி கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பை கிடைக்க வழிவகை செய்யும் என்றால் மிகையில்லை.
தற்போது பெரிய ஐடி, டெக் சேவை நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைக்க 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை திறப்பதை முக்கிய பணியாக வைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ரியல் எஸ்டேட் செலவுகளை குறைப்பது தான். பெரு நகரங்களில் அனைத்து நிறுவனங்களும் சொந்த அலுவலகத்தை வைத்திருக்க முடியாது, இதனால் 95 சதவீத நிறுவனங்கள் வாடகைக்கும், குத்தகைக்கும் தான் அலுவலகம் வைத்திருக்கும்.
தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் வாடகை பெரிய அளவில் அதிகரித்து உள்ள காரணத்தால் ஐடி, டெக் சேவை நிறுவனங்கள் சிறிய நகரங்களுக்கு படையெடுக்கிறது. இப்படி வரும் பெரும்பாலான நிறுவனங்கள் கோயம்புத்தூர்-ஐ தேர்வு செய்தாலும், பல உள்நாட்டு ஸ்டாட்அப் நிறுவனங்கள் தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களை தேர்வு செய்கிறது.

தமிழ்நாட்டை பொருத்த வரையில் அனைத்து துறைக்கும் தகுதியான ஊழியர்களை கொண்டு உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாட்டின் கல்வித்துறை கட்டமைப்பு கடந்த 50 வருடமாக பெரிய அளவில் மேம்பட்டு வருகிறது, தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இதை தாண்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், டீச்சர்ஸ் டிரைனிங், நர்சிங், மெடிக்கல் என அனைத்து பிரிவு கல்லூரிகளும் நிறைந்திருக்கும் காரணத்தால் அனைத்து துறை நிறுவனங்களுக்கும் போதுமான திறன்படைத்த ஊழியர்களை எந்தொரு நிறுவனமும் பெற முடியும்.
இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் அலுவலகங்கள் தமிழ்நாட்டுக்கு வரும் வேளையில் இதற்கான முதலீட்டு வாய்ப்பு, வர்த்தக வாய்ப்பு, வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த டைடல் பார்க் பெரிய அளவில் பலன் அளிக்கும். 2ஆம் தர நகரங்களில் கோயம்புத்தூர்-ஐ தாண்டி சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், மதுரை, திருச்சி மாவட்டங்கள் வளர TIDEL PARK முக்கிய காரணமாக இருக்கும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications