UIDAI அமைப்பால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷனான எம்ஆதார் (mAadhaar) உங்கள் பாக்கெட்டில் உள்ள ஆதார் கார்டைவிட சிறந்ததாகும். மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இந்த எம்ஆதார் ஆப்பில் இணைத்துக் கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட மொபைலை ஆதாருடன் இணைத்திருந்தால் மட்டுமே எம்ஆதார் ஆப்பில் ஆதார் புரொபைலை உருவாக்க முடியும். எம்ஆதார் புரொபைலை செல்லத்தக்க ஐடி புரூப் ஆகவும், இகேஒய்சி அல்லது க்யூஆர் கோடு சர்வீஸ் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.

எம்ஆதார் ஆப் ஆதார் கார்டு எண் வைத்திருப்பவர்களின் சுயவிவரங்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்படம் விவரங்களை அறிய உதவும். சில எளிய முறைகளின் மூலம் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை எம்ஆதார் ஆப்பில் சேர்க்கலாம்.
இந்த ஆப்பில் அதிகபட்சம் மூன்று உறுப்பினர்களை அவர்களது ஆதாரில் சேர்க்கப்பட்ட அதே மொபைல் போன் விவரங்களுடன் இணைக்கலாம்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட அதே மொபைல் எண்ணுடன் தான் ஆப்பில் அவர்களது விவரங்களை சேர்க்க முடியும்.
இதற்கான வழிமுறை-
- உங்களது ஸ்மார்போனில் உள்ள எம்ஆதார் ஆப்பை திறந்து கொள்ளுங்கள்.
- அதில் "Add Profile" என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்களது குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை எண்ணை அதில் உள்ளீடு செய்யுங்கள்.
- விவரங்களை சரிபார்த்தபின்னர் விதிகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- உங்களது குடும்ப உறுப்பினருக்கு ஒரு ஓடிபி அவரது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்து சேரும். அதைக் கேட்டுப் பெறுங்கள்.
- அந்த ஓடிபியை ஆப்பில் டைப் செய்யுங்கள்.
-விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் குடும்ப உறுப்பினரின் விவரங்கள் உங்களது ஆப்பில் சேர்க்கப்பட்டுவிடும்.
குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உங்களது எம்ஆதார் ஆப்பில் வெற்றிகரமாக சேர்த்துவிட்டால் நீங்கள் அவர்களது ஆதார் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இ-கேஒய்சி, லாக்/அன்லாக் ஆதார் மற்றும் பிற அம்சங்களை அவர்களுக்காக நீங்கள் ஒரு பின் நம்பர் மூலம் பயன்படுத்தலாம். எம்ஆதார் என்பது யுஐடிஏஐயால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஆதார் ஸ்மார்ட்போன் பயன்பாடாகும், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தே தங்கள் ஆதார் விவரங்களை எளிதாகவும் வசதியாகவும் அணுக இந்த ஆப் அனுமதிக்கிறது.
பேப்பர்லெஸ் இ-கேஒய்சி முறையில், ஆதார் எண் வைத்திருப்பவரின் அடையாளம் ஆன்லைன் மின்னணு கேஒய்சி சேவை மூலம் சரிபார்க்கப்படுகிறது.
இ-கேஒய்சி சேவையானது அடையாளத்தின் அங்கீகரிக்கப்பட்ட உடனடி சரிபார்ப்பை வழங்குகிறது. காகித அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் கேஒய்சி ஆகியவற்றின் செலவை கணிசமாகக் குறைக்கிறது.
ஆதார் பேப்பர்லெஸ் ஆஃப்லைன் இ-கேஒய்சி ஆனது ஒரு நபர் ஆதார் கடிதத்தின் புகைப்பட நகலை வழங்குவதற்கான தேவையை நீக்குகிறது, அதற்கு பதிலாக, அவர் கேஒய்சி எக்ஸ்எம்எல்லை பதிவிறக்கம் செய்து, அவருடைய கேஒய்சியைப் பெற விரும்பும் ஏஜென்சிகளுக்கு வழங்கலாம்.


Click it and Unblock the Notifications