சென்னை: ரேஷன் கார்டு என்பது அரசாங்க ஆவணங்களில் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டில் எப்படி யாரேனும் இறந்துவிட்டாலோ அல்லது புதிதாக திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்றாலோ பெயர் நீக்கம் செய்யப்படுகிறதோ.. அதேபோல புதிதாக திருமணம் ஆகி ஒரு பெண் வீட்டிற்கு வரும்போது, அவருடைய பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். இந்த செயல்முறை செய்வதற்கு, முன்பு அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது ஆன்லைனில் சுலபமாக செய்து கொள்ளலாம்.
சாமானிய மக்களுக்கு அன்றாட உணவுப் பொருட்கள் போய் சேர வேண்டும் என்ற காரணத்தினால், மாநில அரசு கொண்டு வந்தது தான் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். இதன் மூலம் சர்க்கரை, அரிசி, பருப்பு போன்ற பொருட்களை மாதம் மாதம் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பின்வருமாறு பார்ப்போம்.

குடும்ப உறுப்பினரின் பெயரை எப்போது ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்?: புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும். அதுவே கூட்டுக்குடும்பமாக இருந்தால், திருமணமான நபரின் பெயர் ரேஷன் கார்டில் இருக்கும். எனவே திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் அதில் சேர்க்கப்பட வேண்டும். இது போன்ற சூழல் வரும் போது ஆன்லைனில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் ஒருவருக்கு குழந்தை பிறந்தாலும், அந்த குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.
முன்பெல்லாம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கவோ அல்லது பெயர் சேர்க்கவோ தாலுக்கா அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை, நீங்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே, இந்த செயல்முறைகளை எளிதில் செய்து முடிக்கலாம்.
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் ஒருவருடைய பெயரை சேர்ப்பது எப்படி?: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க பின்பற்ற வேண்டிய ஸ்டெப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டெப் 1: முதலில் https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும். (உங்கள் மாநிலத்தைப் பொறுத்து இந்த இணையதள முகவரி மாறுபடும். மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரி தமிழ்நாட்டுக்கு உரியது).
ஸ்டெப் 2: "பயனாளர் நுழைவு" என்பதைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 3: உங்கள் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை என்டர் செய்து கேப்ட்ச்சா குறியீட்டை கொடுத்து "பதிவு செய்" என்பதைக் கிளிக் செய்யவும்
ஸ்டெப் 4: தற்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: OTP-ஐ என்டர் செய்து உள்நுழையவும். அதன் பின் குடும்பத்தில் உள்ள நபர்கள், உங்களுடைய குடும்ப அட்டை நம்பர், பெரியவர்களின் எண்ணிக்கை, சிறியவர்களின் எண்ணிக்கை, மற்ற குடும்ப அட்டை விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஸ்டெப் 6: "மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்பதன் கீழ் "உறுப்பினரை சேர்க்க" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: திருமணம் ஆகி வீட்டில் இருந்து, ஒரு பெண் வேறு வீட்டிற்கு சென்று இருந்தால் அவருடைய பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். மாறாக அவருடய கணவர் வீட்டில் அந்தப் பெண்ணின் பெயர் ரேஷன் கார்டில் இணைக்கப்பட வேண்டும்.
ஸ்டெப் 8: அதன் பின்னர் 1 முதல் 3 நாட்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்படும். இதனை நீங்கள் ஆன்லைனில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications