சென்னை: உங்களுடைய ஓட்டுனர் உரிமம் (Driving Licence) எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டாலோ அல்லது சேதம் அடைந்து விட்டாலோ, கவலைப்படத் தேவையில்லை. உங்களுடைய ஓட்டுனர் உரிமத்தை மீண்டும் பெற எளிய வழி உள்ளது. இழந்த அல்லது சேதமடைந்த ஓட்டுனர் உரிமத்திற்கு, பதிலாக டூப்ளிகேட் உரிமத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் ஆவணங்களில் ஒன்று ஓட்டுனர் உரிமம். ஓட்டுனர் உரிமம் என்பது ஒரு தனிநபர், பொது சாலையில் மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கு சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்கும் ஒரு ஆவணமாக உள்ளது.

சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை பற்றி ஒருவர் எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளார் என்பதனை RTO அலுவலகத்தில் சோதனை செய்து, அதன் பின் உங்களுக்கு இந்த ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். ஒருவர் அந்த சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாக ஓட்டுநர் உரிமம் உள்ளது.
உங்களுடைய ஓட்டுனர் உரிமம் திருடப்பட்டாலோ,தொலைந்து விட்டலோ, அல்லது சேதமடைந்து விட்டாலோ டூப்ளிகேட் உரிமத்தை RTO அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும் RTO அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தியாவில் டூப்ளிகேட் ஓட்டுனர் உரிமம் பெற யார் விண்ணப்பிக்கலாம்?: ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை இழந்த நபர்கள், ஓட்டுனர் உரிமத்தில் புகைப்படம் மாற்றப்பட வேண்டும் என்ற நபர்கள், ஓட்டுநர் உரிமம் காலாவதியான நபர்கள், தங்கள் தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்க விரும்பும் நபர்கள் என யார் வேண்டுமானாலும் டூப்ளிகேட் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?: டூப்ளிகேட் ஓட்டுனர் உரிமத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்-களைப் பின்பற்றவும்.
ஸ்டெப் 1: முதலில் பரிவஹன் சேவா போர்ட்டலைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: தற்போது "Drivers/ Learners License" என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். புதிய பக்கத்தில், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து நீங்கள் வசிக்கும் மாநிலத்தைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 3: புதிய பக்கத்தில், "Apply for Duplicate License" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: விண்ணப்பப் படிவத்தில்,தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
ஸ்டெப் 5: உங்கள் அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பாஸ்போர்ட் புகைப்படங்கள் போன்ற தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியை பதிவேற்றம் செய்யவும். ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் குறிப்பிட்ட அளவு மற்றும் ஃபார்மெட்டில் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தவும்.
ஸ்டெப் 6: இருக்கக்கூடிய ஆன்லைன் கட்டண முறைகளில், ஒன்றைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்தவும்.
ஸ்டெப் 7: உங்கள் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதும், பரிவஹன் சேவா போர்ட்டலில் உங்கள் டூப்ளிகேட் DL விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ்-ஐ கண்காணிக்கலாம். விண்ணப்ப எண் அல்லது வழங்கப்பட்ட ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications