கூகுள்பே-ல லோன் வாங்கலாமா.. ஒரே ஆச்சர்யமா இருக்கா..எப்படின்னு பாருங்க!

சென்னை: இன்றைய காலகட்டத்தில் கடன் வழங்கும் செயலிகள் நிறைய ப்ளே ஸ்டோரில் உள்ளன. ஆனால் அவற்றை நம்பி கடன் பெறுவது என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக தான் உள்ளது. ஆனால் அனைவருக்கும் நன்கு அறிந்த கூகுள்பே செயலி, தற்போது கடன் வழங்கும் முயற்சியைத் துவக்கியுள்ளது. சிறு வணிகங்கள் மற்றும் விற்பனையாளர்களை ஆதரிக்கும் வகையில், கூகுள்பே சமீபத்தில் கடன் வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கு யார் விண்ணப்பிக்க முடியும் மற்றும் என்னென்ன தகுதிகள் தேவை என்பது குறித்து பார்ப்போம்.

டிஜிட்டல் பேமென்ட் செயலியான கூகுள்பே , சாமானியர்களின் சிறிய அளவிலான கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தியாவில் தனது டிஜிட்டல் கிரெடிட் சேவைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள்பே "Sachet Loan" என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த Sachet loan என்பது குறைந்த அளவிலான கடன் ஆகும். இதன் மூலம் சிறு வணிகர்கள் ரூ. 15,000 வரை கடனைப் பெற முடியும்.

கூகுள்பே-ல லோன் வாங்கலாமா.. ஒரே ஆச்சர்யமா இருக்கா..எப்படின்னு பாருங்க!

Sachet லோன் என்பது குறைந்த அளவிலான தொகையை கடனாக வழங்கும் திட்டம் ஆகும். இது சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் கூகுள்பே செயலியால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக வங்கிகள் கடன் தருவதற்கு நிறைய ஆவணங்கள் மற்றும் விவரங்களை கேட்டு பெற்ற பின்னரே நமக்கு அவர்களிடமிருந்து கடன் கிடைக்கும். இந்த Sachet கடனை பெற பெரிதாக ஆவணங்கள் ஒன்றும் தேவையில்லை. உங்களுடைய பான் கார்டு, ஆதார் கார்டு போதுமானது.

அவசர மருத்துவ செலவுகள் போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு விரைவான பணம் தேவைப்படும்போது Sachet கடன்கள் சிறந்த வழியாக இருக்கும். மாத சம்பளம் பெறுவோர் 15 முதல் 20 தேதிக்குப் பிறகு, அடுத்த சம்பளம் வரும் வரை தங்கள் செலவுகளை மேற்கொள்வதற்கு பணம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் இந்த வகை லோன்கள் அவர்களுக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

கூகுள்பே-ல லோன் வாங்கலாமா.. ஒரே ஆச்சர்யமா இருக்கா..எப்படின்னு பாருங்க!

இந்த வகை கடன்களுக்கு 16 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. மேலும் இதனைத் திருப்பிச் செலுத்த குறைந்தபட்ச மாதத் தவணையாக ரூ. 111 முதல் நீங்கள் செலுத்தலாம். இந்த sachet லோன் திட்டத்திற்காக கூகுள்பே ஃபெடரல் பேங்க், கோடக் மகேந்திரா பேங்க், ஹச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நான்கு பேங்குகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

Sachet லோன் பெற யார் விண்ணப்பிக்க முடியும்?: இந்தக் கடனை பெற விரும்பும் நபர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், கடன் பெறும் நபரின் சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருக்க வேண்டும். எந்த ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ உங்களுக்கு கடன் கொடுப்பதற்கு முன் உங்களுடைய சிபில் ஸ்கோரை பார்த்து விட்டு தான் பிறகு உங்களுக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதைப் பற்றி பரிசீலிக்கும்.

Sachet லோன் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?: முதலில் கூகுள்பே பிசினஸ் ஆப்பை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு கடன் பகுதிக்கு சென்று உங்களுக்கென இருக்கும் சலுகைகளைப் பார்த்து கடன் தொகையை என்டர் செய்யவும். KYC சரிபார்ப்பு முடிந்த பிறகு உங்களுக்கு லோன் வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+