ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் சமீபத்தில் அதன் புதிய மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தினை கோயம்புத்தூரில் தொடங்கியது.
இந்த நிலையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அக்சென்ச்சர் அறிவித்துள்ளது.
அக்சென்ச்சர் நிறுவனம் உலகின் முன்னணி டிஜிட்டல், கிளவுட் சேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சர்வதேச அளவில் பல நாடுகளில் இயங்கி வரும் ஒரு நிறுவனமாகும்.
எங்கு விண்ணப்பிப்பது?
இது சில தினங்களுக்கு முன்பு தான் அதன் புதிய கிளையை கோயம்புத்தூரில் தொடங்கியது. இங்கிருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விருப்பமுள்ள ஊழியர்கள் https://www.accenture.com/in-en/careers என்ற பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஏன் கோயம்புத்தூர்?
AITC, அசென்ச்சரின் மூத்த நிர்வாக இயக்குனர் மகேஷ் ஜூரேல் கூறுகையில், எங்கள் இருப்பினை டயர் 2 நகரங்களில் விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கோயம்புத்தூர் இந்தியாவின் முன்னணி சில கல்வி நிறுவனங்களின் தாயகமாக இருப்பதால், இது எங்களின் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.
கவனம்
நாங்கள் தொடர்ந்து இந்தியாவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். திறனுள்ள ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக கிளவுட், டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு, மேட்டாவெர்ஸ் மற்றும் சில பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேம்பட்ட தொழில் நுட்ப மையங்கள்
கோயம்புத்தூர் பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைத்ராபாத், இந்தூர், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளிலும் அக்சென்சசரின் மேம்பட்ட தொழில் நுட்ப மையங்கள் இந்தியாவில் உள்ளன.
அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட அக்சென்ச்சர், அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் கொள்கைகள், கற்றல் மற்றும் மேம்பாட்டில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது.
நல்ல வாய்ப்பு
சர்வதேச அளவில் பணவீக்கத்தின் மத்தியில் பணியமர்த்தலனது குறைக்கப்பட்டும் , பணி நீக்கம் செய்யப்பட்டும் வரும் நிலையில், கோயம்புத்தூரில் இதுபோன்ற பணியமர்த்தல் அறிவிப்பானது தமிழக ஐடி ஊழியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications