அண்மையில் மத்திய அமைச்சரவை பான் 2.0 திட்டத்திற்கு அனுமதி அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் நாம் பான் கார்டு பயன்படுத்தும் முறையே பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எளிதாக இமெயில் ஐடியிலேயே நம்முடைய புதிய பான் கார்டை பெற்றுக் கொள்ள முடியும். ஏற்கனவே பான் கார்டு வைத்திருக்கும் நபர்கள் வருமான வரித்துறையின் தரவுதளத்தில் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்துவிட்டால் போதும் அவர்கள் எளிதாக அவர்களுடைய பான் கார்டை இமெயில் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். மேலும் பான் கார்டில் ஏதேனும் தகவல்களை மாற்ற வேண்டும் என்றால் கூட எளிமையாக செய்துவிடலாம்.

இமெயில் வாயிலாக பான் கார்டை பெறுவதற்கு முன்பாக உங்களுக்கு NSDL மூலம் பான் கார்டு வழங்கப்பட்டுள்ளதா அல்லது UTI Infrastructure and Technology and Services Ltd. (UTIITSL) மூலம் பான் கார்டு வழங்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது ஒவ்வொருவரின் பான் கார்டின் பின்புறமும் அச்சிடப்பட்டிருக்கும். NSDL உங்களுக்கான பான் கார்டை வழங்கியிருந்தால் பின்வரும் நடைமுறையை பின்பற்றி உங்களுடைய பான் கார்டனை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ளலாம்.
https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களுடைய பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை அடுத்து சப்மிட் செய்ய வேண்டும்.
பின்னர் ஒரு புதிய இணைய பக்கமானது ஓபன் ஆகும் .அங்கே உங்களுடைய விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளலாம். பின்னர் ஓடிபி அனுப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு வரும் ஓடிபி-யை அதில் உள்ளீடு செய்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களும் கொடுத்து விட வேண்டும்.
Protean இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி மூன்று முறை இலவசமாக பான் கார்டினை இமெயிலில் பெற்று கொள்ளலாம். அந்த வரம்பு முடிந்த உடன், இமெயிலில் பான் கார்டினை அனுப்ப 8.26 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த வரம்பிற்குள் இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை, இல்லையெனில் பணத்தை செலுத்துவதற்கான லிங்கில் Proceed to Payment என்பதை கிளிக் செய்ய வேண்டும். கட்டணம் செலுத்திய உடன் உங்களுடைய இமெயில் முகவரிக்கு 30 நிமிடங்களிலேயே பான் கார்டு வந்துவிடும்.
UTIITSL தளம் மூலம் பான் கார்டு பெற்றவர்கள் https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/ePANCard என்ற தளத்திற்கு சென்று பான், ஆதார் , பிறந்த தேதி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் விவரங்களை சரிபார்த்து சப்மிட் செய்து விட்டால் மின்னஞ்சல் முகவரிக்கே புதிய பான் கார்டு வந்துவிடும். புது பான் கார்டு கையில் வேண்டும் என்றால் அதற்கு 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications