இப்போதெல்லாம் வெளிநாட்டு பயணத்திற்கு மட்டுமல்லாமல் சில வணிக நடவடிக்கை மற்றும் பிற உத்தியோக பணிகளுக்கும் பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அதனால் உங்களிடம் கண்டிப்பாக பாஸ்போர்ட் இருக்க வேண்டும். நீங்கள் பாஸ்போர்ட்டை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எளிமையான முறையில் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்கும் அம்சத்தை கொண்டுவர அரசு முயற்சித்து வருகிறது. ஆன்லைனில் மூலம் எவ்வாறு பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆன்லைனில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி?:

ஸ்டெப் 1: பாஸ்போர்ட் சேவை இணையதளத்திற்குச் சென்று, "New User Register Now" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: அதில் "Passport Office" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் கீழே ஒரு மெனு தோன்றும். அதில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 3: புதிய பயனராக இருந்தால் ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் பாஸ்வேர்ட் மற்றும் சில கேள்விகளுக்கு பதில் அளித்து உள்நுழைய தேவைப்படும் விவரங்களை உருவாக்க வேண்டும்.
ஸ்டெப் 4: அதன் பின் உங்களுக்கு மெயில் அனுப்பப்படும். அதில் வரும் லிங்கை-ப் பயன்படுத்தி உள்ளே நுழையவும்.
ஸ்டெப் 5: இதற்கு முன்பு அந்த இணையதளத்தை பயன்படுத்தியவர்கள் பதிவு செய்யாமல் உள்நுழையலாம். புதிதாக பயன்படுத்தும் பயனர்கள் மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 6: தற்போது "Apply for Fresh Passport/Re-issue of Passport" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: இப்போது நீங்கள் படிவத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஆஃப்லைன் மூலம் படிவத்தை சமர்ப்பிக்க இணையதளத்திலிருந்து அந்தப் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 8: ஆன்லைனில் டிஜிட்டல் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, அனைத்து தகவல்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 9: படிவத்தை நிரப்பிய பிறகு, உங்கள் கட்டணத்தை ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா அலுவலகத்திற்க்கு சென்று செலுத்துங்கள். உங்கள் வசதியைப் பொறுத்து, பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயிண்ட்மெண்ட்-ஐ பதிவு செய்யவும்.
ஸ்டெப் 10: அப்பொய்ன்மெண்ட் ஸ்லாட்டை தேர்ந்தெடுத்து கேப்ட்சா குறியீட்டை சரியாக சமர்ப்பித்து உறுதிப்படுத்தவும். ஆர்டர் நம்பர் SMS அல்லது மெயில் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு ஆன்லைனில் பணத்தை செலுத்துங்கள்.
உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரிச் சான்று மற்றும் அடையாள ஆவணங்கள் போன்ற ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் உங்களுடைய பாஸ்போர்ட் வீட்டிற்கு வந்துவிடும்.


Click it and Unblock the Notifications