8 சதவீத மானியத்தில் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு.. இந்த பொன்னான திட்டம் பற்றி தெரியுமா?

சென்னை: நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் "பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா" திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு 5 சதவீத விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படுகிறது. இத்தகைய கடன்களுக்கு அரசாங்கம் 8% வரை மானியமும் வழங்குகிறது.

PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் தச்சர்கள், பொற்கொல்லர்கள், கல் சிற்பிகள் கொத்தனார்கள், கொல்லர்கள், முடிதிருத்துபவர்கள், மாலுமிகள் போன்றவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டு PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது.

 8 சதவீத மானியத்தில் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு.. இந்த பொன்னான திட்டம் பற்றி தெரியுமா?

பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் ஆரம்பக் கடனாக ரூ. 1 லட்சம் பெறுவார்கள் மற்றும் அதனை 18 மாதங்களில் வெற்றிகரமாகச் செலுத்திய பிறகு, பயனாளி ரூ. 2 லட்சம் கூடுதல் கடனுக்குத் தகுதி பெறுவார். இந்த கடன்களுக்கான வட்டி விகிதம் 5 சதவீதமாகவே இருக்கும். இந்தத் திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள், என்ன ஆவணங்கள் தேவை மற்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விண்ணப்பத்தின் செயல்முறை ஆகியவற்றைப் பார்ப்போம்.

தகுதி: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒரு நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் அவரது வயது 18 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது. PMEGP, PM SVANidhi மற்றும் முத்ரா கடன் ஆகிய திட்டங்களின் மூலம் ஏற்கனவே கடனைப் பெற்றிருக்கக் கூடாது.

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ், மொபைல் நம்பர், ஜாதிச் சான்றிதழ், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

இத்திட்டத்தால் யார் பயனடைவார்கள்?: தச்சர், கூடை செய்பவர், பாய் செய்பவர், துடைப்பம் செய்பவர், கொல்லர், பொற்கொல்லர், கொத்தனார், முடிதிருத்தும் தொழிலாளி, மலக்கர், வாஷர்மேன், தையல்காரர், பூட்டு தொழிலாளி, பொம்மை மற்றும் பொம்மைகள் செய்பவர், கவசம் தயாரிப்பாளர், சிற்பி, கல் செதுக்குபவர், கல் உடைப்பவர், செருப்பு/காலணி தயாரிப்பாளர், படகு தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் டூல்கிட் மேக்கர், மீன்பிடி வலை செய்பவர்கள் போன்ற நபர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?:

ஸ்டெப் 1: PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்.

ஸ்டெப் 3: OTP சரிபார்ப்பு மூலம் உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் அட்டையை சரிபார்க்கவும்.

ஸ்டெப் 4: PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பதிவுப் படிவத்தை உங்கள் பெயர், முகவரி மற்றும் வணிகம் தொடர்பான தகவல்கள் போன்ற விவரங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

ஸ்டெப் 5: PM விஸ்வகர்மா டிஜிட்டல் ஐடி மற்றும் சான்றிதழைப் பதிவிறக்கவும்.

ஸ்டெப் 6: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.

ஸ்டெப் 7: அதன் பின், உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், கடன் அங்கீகரிக்கப்படும்.

PM விஸ்வகர்மா யோஜனாவின் பலன்கள்: இந்தத் திட்டமானது தாலுகா அல்லது மாவட்டத் தலைமையகத்தில் அமைந்துள்ள சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையால் நடத்தப்படும் பயிற்சித் திட்டத்தை உள்ளடக்கிய கடன் வழங்கும் திட்டமாகும். விண்ணப்பதாரருக்கு அவருடைய திறன்களைக் கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தினசரி உதவித்தொகையாக ரூ. 500 வழங்கப்படும். மேலும், உங்கள் தொழிலுக்கு ஏற்ற கருவிகள் வாங்க ஊக்கத்தொகையாக ரூ.15,000 மானியம் வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+