சென்னை: ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
முதன்முறையாக கடந்த 2016 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களின் குடும்பங்களும் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் விண்ணப்பம் செய்து அவர்களின் பெயரில் இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இணைப்பினை பெற முடியும்.

திட்டத்தின் பலன்கள் என்னென்ன?: உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் அடுப்பும் முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு வெளியிடும் தகவலின் அடிப்படையில் இந்தியாவில் இதுவரை பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்னென்ன?: இந்தத் திட்டத்தில் வீட்டு பெண்களின் பெயரில் மட்டுமே சிலிண்டர் இணைப்பு பெற முடியும். அவர்கள் இந்திய குடிமகளாக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர் மட்டுமே இதில் விண்ணப்பம் செய்ய முடியும். மேலும் விண்ணப்பதாரர் பெயரில் சொந்தமாக ரேஷன் கார்டு இருக்க வேண்டும் . ஏற்கனவே அவரது பெயரின் கீழ் எந்தவித எரிவாயு இணைப்பும் இருக்கக் கூடாது.
கிராம புறமாக இருந்தால் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும், நகர்ப்புறமாக இருந்தால் 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும். அது தவிர பட்டியல் இன மற்றும் பழங்குடியின மற்றும் நலிவடைந்த பிரிவை சேர்ந்த பெண்களுக்கும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்குபவர்களும் இதில் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
தேவையான ஆவணங்கள் என்னென்ன?: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாக அந்தந்த மாநில அரசுகள் வழங்கிய ரேஷன் அட்டை சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் செய்யும் பெண்ணின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் , முகவரி சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் விண்ணப்பம் செய்யும் பெண்களுக்கு மத்திய அரசே சிலிண்டருக்கான டெபாசிட்டாக 1850 ரூபாய் செலுத்த விடும். இது தவிர அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் அட்டை , டெமோ ஆகியவற்றுக்கான அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்தி விடும். இவர்களுக்கு வழங்கப்படும் முதல் சிலிண்டருக்கு எந்த ஒரு பணத்தையும் இவர்கள் செலுத்த வேண்டிய தேவை இல்லை.
இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் பெண்கள் https://pmuy.gov.in/ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் Apply for PMUY Connection லிங்கினை கிளிக் செய்து, உங்கள் ஏரியாவில் எந்த நிறுவனம் சிலிண்டர் சப்ளை செய்கிறதோ அதை தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் தேர்வு செய்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு கொண்டு செல்லும், அதில் Ujjwala 3.0 New Connection என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களின் விவரங்கள் கேட்கப்படும் அவற்றை வழங்கி, தேவையான ஆவணங்களை அப்லோட் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு அருகில் உள்ள டீலர் இதனை மதிப்பாய்வு செய்து இலவச இணைப்பை வழங்குவார்.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications