சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் கார்டு முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது. ரேசன் கார்டு வாயிலாக மாதம் தோறும் மானிய விலையில் அரிசி, பருப்பு ,கோதுமை உள்ளிட்டவை மட்டும் இன்றி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் பணமும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.
பல்வேறு அரசு சலுகைகளை பெறுவதற்கும் ரேசன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு வேளை துரதிஷ்டவசமாக நீங்கள் உங்களுடைய ரேஷன் கார்டை தொலைத்து விட்டால் கவலைப்பட வேண்டாம். அதனை எளிதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்து மீண்டும் பெற முடியும். அதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பதை தான் நாம் தற்போது பார்க்க போகிறோம் .

தமிழ்நாட்டில் ரேசன் கார்டுக்கு புதிதாக விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, அதில் மாற்றங்கள் செய்வது என அனைத்தையுமே நாம் ஆன்லைன் வாயிலாகவே செய்து முடிக்கலாம்.
https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் ஆங்கிலத்தில் Smart cardf reprint என்றும் தமிழில் நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்ய என்றும் ஒரு லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
உடனே ஒரு பக்கம் ஓபன் ஆகி அதில், உங்கள் குடும்ப அட்டையோடு இணைக்கப்பட்டுள்ள 10 இலக்க கைபேசி எண்ணை கேட்கும். அதனை உள்ளீடு செய்து, கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபி-யை உள்ளீடு செய்தால் உங்களுடைய குடும்ப அட்டை விவரங்கள் அதில் காண்பிக்கும்.
உங்களுடைய முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரி பார்த்த பிறகு நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம். அப்போது பிடிஎப் வடிவில் உங்களுடைய ஸ்மார்ட் கார்டு ஆனது கிடைக்கும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு பிரிண்ட் எடுக்க வேண்டும்.
உங்களுடைய ரேசன் அட்டைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்கு சென்று நகலை சமர்ப்பித்தால் அடுத்த சில நாட்களில் உங்களுக்கான புதிய ரேஷன் கார்டு கிடைத்துவிடும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1967 அல்லது 1800-425-5901 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு நகல் ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பம் செய்த பின்னர் அதன் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலை என்பதை கிளிக் செய்ய் வேண்டும்.
அப்போது, நீங்கள் ஏற்கனவே நகல் வேண்டி விண்ணப்பம் செய்த போது உங்களுக்கு ஒரு குறிப்பு எண் பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த குறிப்பு எண்ணை உள்ளீடு செய்தால் நகல் ஸ்மார்ட் கார்டின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications