சென்னை: ஒவ்வொரு வரி செலுத்துபவரும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு தேவை. இது வருமான வரித் துறையால் தரப்படும் பத்து இலக்க எண் ஆகும். இதேபோல், இந்தியாவில் வரி விதிக்கக்கூடிய வருமானம் ஈட்டும் எந்த ஒரு வெளிநாட்டு இந்தியரும் என்ஆர்ஐ பான் கார்டை வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் என்ஆர்ஐயாக இருந்தால், பான் கார்டு விண்ணப்ப செயல்முறை, என்ஆர்ஐ பான் கார்டுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் அதன் கட்டணங்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதன் விவரங்களை பற்றி கீழே பார்ப்போம்.

நீங்கள் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகனாக இருந்தால், நீங்கள் படிவம் 49A ஐ நிரப்ப வேண்டும். நீங்கள் இந்தியக் குடிமகனாக இருந்தும், வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால், நீங்கள் படிவம் 49AA ஐ நிரப்ப வேண்டும்.
பின்னர், ஆன்லைனில் படிவங்களை சமர்ப்பிக்க UTIITSL அல்லது NDSL இணையதளங்களுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் படிவத்தைச் சமர்ப்பித்தவுடன், 15 இலக்க எண் மற்றும் ஒப்புகை நகலை உங்கள் ஆவணங்களுடன், உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
நீங்கள் இந்தியாவில் இருந்தால், உங்களுக்கு பான் கார்டு ஐ அனுப்ப ரூ.107 வசூலிக்கப்படும். நீங்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்தால், அதற்கு ரூ. 989, விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, பணம் செலுத்தலாம்.
NRI பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
NRI விண்ணப்பதாரர்கள் PAN கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
2 சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
பாஸ்போர்ட்டின் நகல்
வெளிநாட்டு முகவரி ஆதாரம் - வெளிநாட்டு வங்கி அறிக்கையின் நகல்
NRI பான் கார்டுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?:
இந்தியாவில் வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள NRIகள்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள NRIகள்.
டெபாசிட்டரி அல்லது தரகர் மூலம் பங்குகளை வாங்கி விற்கும் NRIகள்.
வர்த்தகத்தைத் தவிர வேறு காரணங்களுக்காக இந்தியாவில் சொத்து வாங்க விரும்பும் NRIகள்.
NRI பான் கார்டு எவ்வாறு பெறுவது?: ஆன்லைன் TIN போர்ட்டலுக்குச் சென்று "Apply Online" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். "Application Type" என்பதன் கீழ், இந்தியக் குடியுரிமை பெற்ற NRIகளுக்கான படிவம் 49A மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களுக்கும் இதே 49AA படிவம் தான். எனவே அதனை தேர்ந்தெடுக்கவும். தேவையான பிற விவரங்களை நிரப்பி, கேப்ட்சாவை உள்ளிட்டு "submit " என்பதை அழுத்தவும்.
பின்வரும் பக்கம் உங்களை NRI PAN அட்டை விண்ணப்பப் படிவத்திற்கு அழைத்துச் செல்லும். அதை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் உங்கள் கையொப்பத்தை பதிவேற்றி, சமர்ப்பிக்கவும். அதன் பின் கட்டணத்தை செலுத்தவும்.
என்ஆர்ஐ ஆன்லைன் பான் கார்டு விண்ணப்பத்திற்கான மேற்கண்டவற்றை முடித்த பிறகு, 15 இலக்க எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். இந்த எண் உங்கள் விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் ஐ பின்னர் சரிபார்க்க உங்களை அனுமதிக்கும்.


Click it and Unblock the Notifications