டிசிஎஸ்-ன் சூப்பர் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பயன்.. ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி நிறுவனங்கள் சமீபத்திய காலமாக தேவைகள் இருந்து வரும் நிலையில், அட்ரிஷன் விகிதம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. இந்த அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

குறிப்பாக பிரெஷ்ஷர்களை பணியமர்த்தல், அதிக சம்பளம், ஊக்கத் தொகை, பதவி உயர்வு என பல வகையிலும், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு படி மேலே போய், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமர்த்திக் கொள்ள நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

டிசிஎஸ்-ன் தோல்வி.. பல லட்சம் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! டிசிஎஸ்-ன் தோல்வி.. பல லட்சம் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

 இன்டர்ன்ஷிப் குறித்த அறிவிப்பு

இன்டர்ன்ஷிப் குறித்த அறிவிப்பு

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் 2022ம் ஆண்டிற்கான இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான அறிவிப்பினை கொடுத்துள்ளது. இதற்காக பதிவு செய்து கொள்ளவும் அறிவிப்பினைக் கொடுத்துள்ளது. இது கல்வி பயிலும் மாணவர்களும் தங்கள் தகுதியினை மேம்படுத்திக் கொள்ளவும், திறனை வளர்த்துக் கொள்ளவும் சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது வேலை வாய்ப்பினையும் எளிதில் பெற வாய்ப்பாக அமையலாம்.

எவ்வளவு காலம் பயிற்சி?

எவ்வளவு காலம் பயிற்சி?

டிசிஎஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையினை சேர்ந்த மாணவர்களை இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு அழைக்கிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடையலாம் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சியானது ஆறு முதல் 8 வாரங்களுக்கு இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதே நீண்டகால பயிற்சிகளுக்கு 16 - 18 வாரங்கள் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தகுதி என்ன?
 

தகுதி என்ன?

பிஹெச் டி, எம் எஸ், எம் டெக் அல்லது பி இ, பி டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், டிசிஎஸ் இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது.

மேற்கண்ட மாணவர்கள் தவிர, டிசிஎஸ் உளவியல், சமூகவியல், பொருளாதாரம், கணிதம், கேம் டிசைன் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர்களையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

 

 பயிற்சி

பயிற்சி

டிசிஎஸ் நிறுவனம் AIESEC ஆல் உலகளாவிய பங்குதாரராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதே படிக்காதவர்களுக்காக ACE திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 200-க்கும் மேற்பட்டோருக்கும் AISEC பயிற்சியாளர்கள் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றனர்.

எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது?

டிசிஎஸ்-ன் இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைய அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம். அல்லது மாணவர்கள் Careers.research@tcs.com என்ற மெயில் ஐடி விவரங்களை அனுப்பலாம். மற்ற விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tcs டிசிஎஸ்
English summary

How to apply to TCS 2022 internship program? Who can join?

TCS, India's leading IT company, has announced its internship plan for 2022. Notice has also been given to register for this.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X