சூரிய சக்தியை உபயோகிக்க ஊக்குவிப்பதற்காகவும், நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் தான் "பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா" என்ற திட்டம். சிலருடைய வீட்டில் 24 மணி நேரமும் ஃபேன் மற்றும் AC ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் கரண்ட் பில்லுக்கு அதிக செலவாகலாம்.
அரசு வழங்கும் இந்தத் திட்டத்தின் மூலம் உங்களால் 300 யூனிட் வரை மின்சாரம் சேமிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இந்தப் பதிவில் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் விவரங்கள் குறித்து பார்ப்போம்.

பிரதம மந்திரி சூரிய ஒளி மின்சார திட்டம் அனைத்து குடும்பங்களையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் குறிக்கோள் சூரிய சக்தியை அதிகரிப்பது மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதாகும்.
பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா என்றால் என்ன?: இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும். குடும்பங்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். சோலார் பேனல்கள் அமைப்பதற்கான செலவு அரசால் மானியமாக வழங்கப்படும்.
யாரெல்லாம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்?: இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் பயனைப் பெறலாம். குடும்பத்திற்கு சரியான மின் இணைப்பு இருக்க வேண்டும். குடும்பம் வேறு எந்த சோலார் பேனல் மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2 கிலோவாட் வரையிலான சோலார் பேனல்களுக்கு 60% மானியம் கிடைக்கிறது. 2 கிலோவாட் மற்றும் 3 கிலோவாட் வரையிலான சோலார் பேனல்களுக்கு, 40% மானியம் வழங்கப்படும்.
யாருக்கு எவ்வளவு மானியம் கிடைக்கும்?: 1 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.30,000, 2 கிலோவாட் சிஸ்டம்களுக்கு ரூ.60,000 மற்றும் 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட சிஸ்டங்களுக்கு ரூ.78,000 வரை மானியம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மானியத்துடன், மாநில அரசுகளும் மானியம் வழங்கும்.
சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் போது ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 18000 வரை மின்சார கட்டணத்தை சேமிக்க முடியும். அதேபோல உங்களிடம் EV வாகனங்கள் இருந்தால், அவற்றிற்கு சார்ஜ் செய்யவும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://pmsuryaghar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லலாம். அதன்பின் "அப்ளை ஃபார் ரூஃப் டாப்" என்ற மெனுவை கிளிக் செய்யவும். இப்பொழுது நீங்கள் உங்களது மாநிலம், மாவட்டம், மின்சாரத் விநியோக நிறுவனத்தின் பெயர் மற்றும் நுகர்வோர் எண் ஆகியவற்றை என்டர் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அனைத்து தேவையான விவரங்களையும் கொடுத்து முடித்த பிறகு, நீங்கள் உங்களுக்கான ஒப்புதலைப் பெறுவீர்கள்.


Click it and Unblock the Notifications