2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். அதனைத் தொடர்ந்து தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் தலைமையிலான ஆட்சியில் சுமார் 93 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 28 வயதே நிரம்பிய இளம் MLA-க்களும் அடங்குவர். இதுபோன்ற அரசியல் மாற்றங்களை எல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் பலருக்கு "நாமும் ஒரு MLA-வாக மாற வேண்டும்" என்ற ஆசை வரும். இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் என்னென்ன தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
MLA ஆக என்ன செய்ய வேண்டும்?: MLA-வாக பொறுப்பேற்க விரும்பினால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, போட்டியிடும் குறிப்பிட்ட தொகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற வேண்டும். ஒரு வேலை போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டால் அவர் MLA-வாக பொறுப்பேற்கலாம்.
அதன் பின்னர் பொறுப்பேற்கும் MLA-க்களுக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். அதாவது எந்த தொகுதியில் வெற்றி பெற்றாரோ? அந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதேபோல மக்களின் குறைகளைக் கண்டறிந்து சட்டமன்றத்தில் அதற்கு தீர்வு காண வேண்டும். அரசின் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். அதோடு அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கீழ்வரும் தகுதிகள் அவசியம்.

குறைந்தபட்ச வயது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு நபர் குறைந்தபட்சம் 25 வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும். ஆர்டிகிள் 173-இன் கீழ் 20 வயதுக்கு குறைவான எந்த நபரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது. MLA ஆவதற்கான மிக முக்கியமான தகுதிகளில் இதுவும் ஒன்று.
இந்திய குடியுரிமை கட்டாயம்: கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுபவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். வெளிநாட்டினாரோ அல்லது இந்திய குடியுரிமை இல்லாத தனிநபர்களோ சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது.
வாக்காளராக இருக்க வேண்டும்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மற்றொரு முக்கியமான விதி என்ன தெரியுமா? அந்த நபர் ஏதேனும் ஒரு மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக தமிழகத்தில் MLA-வாக வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுக்கென ஓட்டுரிமை வைத்திருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் சட்டப்பூர்வமாக தேர்தலில் நிற்க முடியாது.
கல்வித் தகுதி: சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு எந்த ஒரு கட்டாய கல்வி தகுதியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே கல்லூரி பட்டம் அல்லது கல்விப் பின்னணியோ இல்லாமல் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் MLA-க்கள் தொடர்ந்து தங்கள் தொகுதிக்காக பணியாற்ற வேண்டும். சட்டமன்ற பதவிக்காலம் முடிந்த பிறகு புதிதாக தேர்தல் நடத்தப்படும்.
இப்படி போட்டியிட்டு சட்டமன்றத்தில் நுழையும் MLA-க்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?: MLA-க்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.1,05,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. இதோடு கூடுதலாக பயணப்படி, இலவச மருத்துவம் போன்ற சலுகைகளும் உண்டு. ஒரே ஒருமுறை MLA-வாக பதவியேற்றால், அதன் பின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு பென்ஷன் வழங்கப்படும். பதவிக் காலம் முடிந்து பென்ஷனாக ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும்.
5 ஆண்டுகால MLA பதவி முடிந்த பிறகு மீண்டும் அவர் MLA-வாக பொறுப்பேற்கவில்லை என்றாலும் இந்த பென்ஷன் தொடர்ந்து வழங்கப்படும். அதுவே ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று முறை எம்.எல்.ஏ-வாக பதவியேற்றால் அவருக்கு சற்று கூடுதலான பென்ஷன் தொகை வழங்கப்படும்.
சில ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதைக் குறைக்குமாறு விவாதங்கள் நடந்து வருகிறது. இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 25-லிருந்து 18 அல்லது 21-ஆக குறைக்கலாம் என்று நாடாளுமன்ற குழு பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications