இந்தியாவில் டெபிட் கார்டு பேமெண்ட் மிகவும் முக்கியப் பேமெண்ட் கருவியாக இருக்கும் நிலையில், மக்கள் அனைவரும் இதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதேபோல் இன்று டிஜிட்டல் மற்றும் பணப் பரிமாற்றத்தில் அதிகப்படியான மோசடிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் உங்கள் டெபிட் கார்டு தொலைந்துவிட்டாலோ, அல்லது நீங்கள் இல்லாமல் வேறு யாரேனும் உங்களுக்குத் தெரியாமல் டெபிட் கார்ட்-ல் பணச்தை எடுக்க முயன்றால் கட்டாயம் உடனடியாக உங்கள் டெபிட் கார்டை முடக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பணம் திருட்டுப் போக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் டெபிட் கார்ட்-ஐ பிளாக் செய்வது எப்படி என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகவும், அதிக வங்கி வாடிக்கையாளர்களையும் வைத்துள்ள வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டெபிட் கார்டுகளை எப்படி முடக்க வேண்டும் என்பதை மட்டும் அல்லாமல் எஸ்பிஐ டெபிட் கார்டை-ஐ எப்படி ரீபிளேஸ் செய்ய வேண்டும் என்பதையும் இப்போது பார்ப்போம்.
எஸ்பிஐ டெபிட் கார்டை முடக்க முதலும் முக்கியமானது, டெபிட் கார்ட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் எண் வேண்டும். இல்லையெனில் டெபிட் கார்டு-ஐ முடக்க வங்கி கிளைக்குத் தான் செல்ல வேண்டும், மொபல் எண் இருந்தால் சில நிமிடத்தில் டெபிட் கார்டை முடங்கி விடலாம்.

எஸ்பிஐ வங்கியில் டெபிட் கார்டை முடக்க 2 வழிகள் உள்ளது.
1. டெபிட் கார்டு உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 1800 1234 என டோல் ப்ரி எண்ணுக்கு கால் செய்ய வேண்டும்
2. உங்கள் டெபிட் கார்டு பிளாக் செய்ய 0 அழுத்த வேண்டும்
3. இங்கு 2 ஆப்ஷன் கொடுக்கப்படும்.
4. இதில் 1-ஐ அழுத்தினால் மொபைல் எண் & கார்டு நம்பர் கொடுத்தும் பிளாக் செய்யலாம், அல்லது 2 அழுத்தி மொபைல் எண் & வங்கி கணக்கு எண் கொடுத்தும் பிளாக் செய்யலாம்
5. நீங்கள் 1-ஐ அழுத்தினால் டெபிட் கார்டில் இருக்கும் கடைசி 5 இலக்க எண்களைப் பதிவிட வேண்டும்.
6. நீங்கள் பதிவிட்ட டெபிட் கார்டின் கடைசி 5 இலக்க எண்களை உறுதி செய்ய 1 அழுத்த வேண்டும்.
7. மீண்டும் பதிவிட 2-ஐ அழுத்த வேண்டும்.
உறுதி செய்த பின்பு வங்கியில் இருந்து உங்களுக்கு எஸ்எம்எஸ் டெபிட் கார்டை பிளாக் செய்யப்பட்டு விட்டதாக மெசேஜ் உடனே பெறுவீர்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications