உங்களால் 50000 முதல் 60000 முதலீடு செய்ய முடியுமேயானால்.. இதை ட்ரை பண்ணுங்க பணம் கொட்டும்..!

குறுகிய காலக்கட்டத்தில் பெரும் தொகை என்பது தான் பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது. இதற்காக மக்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கவும் தயாராக உள்ளனர். இப்படியிருக்கும் சூழ்நிலையில் பாதுகாப்பான முறையில் எவ்விதமான மோசடியான வழிகள் இல்லாமல் குறிப்பிடத்தக்க அளவிலான ரிஸ்க் உடன் முதலீடு செய்தால் உங்களால் 5 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் சேர்த்துவிடலாம்.

50 லட்சம் ரூபாய் என்பது ஒரு பெரும் கனவு போல் தோன்றலாம். ஆனால், நீங்கள் தொடர்ந்து முயற்சி முதலீடு செய்யும் பழக்கத்தை கொண்டு இருந்தால் இது அவ்வளவு தூரமான டார்கெட் அல்ல. இந்த இலக்கை அடைய SIP முதலீட்டு முறை சிறந்த தேர்வாக திகழ்கிறது.

உங்களால் 50000 முதல் 60000 முதலீடு செய்ய முடியுமேயானால்.. இதை ட்ரை பண்ணுங்க பணம் கொட்டும்..!

50 லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளில் அடைய, ஆண்டுக்கு சுமார் 12 சதவீதம் வருமானம் எதிர்பார்க்கப்படும் ஒரு முதலீட்டு திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் போது உங்களுடைய பாதி வேளை முடிந்தது. இன்று சந்தையில் பல மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் பல வகையான திட்டங்களை மக்களுக்கு முதலீட்டுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்து உங்கள் முதலீட்டை துவங்கலாம்.

சரி 5 வருடத்தல் 50 லட்சம் ரூபாய் சேமிக்க ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி உள்ளது. இதற்கான பதிலை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

50 லட்சம் என்ற இலக்கை இடைய நீங்கள் மாதம் ரூ.61,000 முதலீடு செய்ய வேண்டும். இது 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.36.6 லட்சமாகும், மீதமுள்ள ரூ.13.4 லட்சம் முதலீட்டு வருமானமாக இருக்கும். இந்த மாதாந்திர தொகை பலருக்கு பெரிய பொருத்தமாக இருக்கலாம், ஆனால் இதை எளிதாக்க ஒரு படிப்படியான திட்டம் உள்ளது.

உங்களின் மாதாந்திர வருமானம் அதிகரிக்கும் போது, முதலீட்டு தொகையை 10-15 சதவீதம் உயர்த்தி முதலீடு செய்யலாம், இது உங்கள் நிதி சுமையை குறைக்கும்.

படிப்படியான முதலீடு திட்டம்
ரூ.61,000 மாதம் முதலீடு செய்ய முடியாவிட்டால், தொடக்கத்தில் ரூ.50,000 முதல் தொடங்கலாம். பின்னர், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, முதலீட்டு தொகையை உயர்த்தலாம்.

முதல் ஆண்டு ரூ.50,000 முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு ரூ.57,500 ஆகவும், பின்னர் ரூ.66,000 ஆகவும் உயர்த்தலாம். ஐந்தாவது ஆண்டு இறுதியில், நீங்கள் ரூ.87,000 அளவிற்கு முதலீடு செய்யலாம்.

முதலீட்டு ஆலோசனைகள்
அதிகப்படியான வருமானத்தை அடைய, பங்கு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யுங்கள், ஆனால் இதில் சில ஆபத்துகள் உள்ளன என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டும் SIP தொகையை உயர்த்துவது, உங்கள் முதலீட்டை மேலும் வலுப்படுத்தும். பொறுமை மற்றும் தவறாமல் முதலீடு செய்வது இதன் வெற்றிக்கு முக்கியம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+