கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் நகைக் கடைகள் திறக்கப்படுவது இல்லை.
இந்தச் சூழ்நிலையில் அட்சய திருதியை நாளில் தங்கத்தை எப்படி வாங்குவது என்ற குழப்பம் அனைவரிடத்திலும் உள்ளது. கொரோனா தொற்று நிறைந்த இந்தச் சூழ்நிலையில் டிஜிட்டல் கோல்டு அல்லது டிஜிட்டல் தளங்களில் மட்டுமே தங்கம் வாங்க முடியும்.
ரிலையன்ஸ் ஜியோமார்ட்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முகேஷ் அம்பானி தலைமையிலான ஆன்லைன் ரீடைல் வர்த்தகப் பிரிவான ஜியோ மார்ட் தளத்தில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க முடியும். நாட்டின் பல பகுதிகளில் ஜியோமார்ட் தங்க நாணயங்களை விற்பனை செய்து வருகிறது.
ஹோம் டெலிவரியில் தங்கம்
அதிகப்படியாக ஒருவர் 3 நாணயங்கள் வாங்கும் அளவிற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. உங்கள் பகுதிக்கு டெலிவரி இருந்தாலோ, விற்பனை செய்யப்பட்டாலோ இன்று ஜியோமார்ட் வாயிலாகத் தங்கத்தை நீங்கள் வாங்கலாம்.
பேடிஎம் டிஜிட்டல் கோல்டு
ஜியோமார்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து பேடிஎம் மணி தளத்திலும் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கப்பட்டு வீட்டிற்கு டெலிவரி பெற முடியும். பேடிஎம் தளத்தில் வெறும் 1 ரூபாய் முதல் அதிகப்படியாக 1,99,000 வரையில் தங்கம் வாங்க முடியும்.
பேடிஎம் MMTC-PAMP தளத்துடன் இணைந்து ஆன்லைனில் தங்கம் விற்பனை செய்து வருவதால் தங்கத்தை நீங்கள் டிஜிட்டல் வேலெட்-ம் சேமித்து வைக்கலாம்.
போன்பே நிறுவனம்
பேமெண்ட் துறையில் பேடிஎம் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான போன்பே நிறுவனம் டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்கும் வாயப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இதுமட்டும் அல்லாமல் அட்சய திருதியை முன்னிட்டு 20 சதவீதம் வரையிலான கேஷ்பேக் அறிவித்துள்ளது போன்பே.
பிரபல நகை கடைகள்
இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி நகை கடைகளான தனிஷ்க், கல்யாண் ஜுவல்லர்ஸ், மலபார் கோல்டு அண்ட் டைமெண்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை விற்பனை செய்து வருகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்
எப்படி மளிகை பொருட்களைக் கடைகளை விட்டுவிட்டு மக்கள் ஆன்லைனில் வாங்க துவங்கிவிட்டார்களோ, அதேபோல் இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் தங்கம் மற்றும் தங்க நகைகளை ஆன்லைனில் வாங்க துவங்கியுள்ளனர்.
ஜாக்பாட் தான்
கடந்த சில வருடங்களாகவே பேடிஎம், போன்பே ஆகிய தளத்தில் டிஜிட்டல் தங்கம் விற்பனை அமேகமாக இருந்த நிலையில் இந்த லாக்டவுன் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஜாக்பாட் என்றால் மிகையில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியே போகாமலே தங்கத்தை வாங்க முடியும். நோ டென்ஷன் பேபி..
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications