சென்னை: பொதுவாக ஒரு சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்தவுடன் அதனை அந்த சொத்தின் பட்டாவை மாற்றம் செய்வது அவசியம். அந்த வகையில் பட்டா மாறுதல் என்பது தற்போது தமிழ்நாட்டில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
நம்முடைய போன் வாயிலாகவே நாம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்த விட முடியும். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. எங்கிருந்தும் எந்த நேரத்திலும் என்ற இணையதளத்தை தமிழக அரசு பிரத்தியேகமாக செயல்படுத்தி வருகிறது.
https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதள பக்கத்திற்கு சென்று எளிதாக நாம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். இந்த வலைத்தளத்தில் பட்டா மாறுதல் விண்ணப்பிக்க என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த தளத்தில் உங்களின் செல்போன் எண் கேட்கப்படும், அதனை வழங்கினால் உங்கள் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும் அதனை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம், உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என இரண்டு பிரிவுகள் அதில் காட்டப்படும். அதில் எது தேவையோ அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் 60 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த சம்மதா என கேட்கும் சம்மதம் என அடுத்து என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
மாறுதலுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பொதுமக்கள் இதற்காக பொது சேவை மையங்களையோ அல்லது அரசு அலுவலகங்களையோ நாடிச் செல்ல வேண்டிய தேவை இருக்காது எந்தனை விடுமுறை நாட்களில் கூட ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியும் .
பட்டா மாறுதல் தொடர்பான ஆவணங்களையும் ஆன்லைனிலேயே பதிவேற்றம் செய்யலாம். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விண்ணப்பம் செய்பவர்கள் கிரைய பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம் ,பாகப்பிரிவினை பத்திரம் ,தான பத்திரம், பரிவர்த்தனை பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் இவற்றின் அளவு 3 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களின் மாவட்டம் , தாலுகா, கிராமம், பரிவர்த்தனை வகை , பதிவாளர் அலுவலகம், பதிவு செய்யப்பட்ட தேதி, ஆவண பதிவு எண் ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும். அனைத்து தகவல்களையும் வழங்கி விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினால் போதும் உங்கள் விண்ணப்பம் உரிய அலுவலருக்கு சென்றுவிடும். விண்ணப்பம் நிறைவேற்றப்படும் போது உங்கள் செல்போன் எண்ணுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் இந்த இணையதள பக்கத்திலேயே மீண்டும் சென்று நீங்கள் பட்டாவை சரிபார்க்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications