ஆன்லைனில் RC புக்கில் பெயர் மாற்றுவது எப்படி? இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!

சென்னை: ஒரு வாகனத்தை விற்பனை செய்த பிறகு அல்லது வாகனத்தின் உரிமையில் மாற்றங்கள் ஏற்படும்போது, RC புக்கில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். முன்னதாக இது பெரிய செயல்முறையாக இருந்தது. ஆனால், தற்போது RC புக் பெயர் மாற்ற செயல்முறையை எளிதில் ஆன்லைன் மூலம் செய்துக் கொள்ளலாம். இந்தப் பதிவில் ஆன்லைன் முறையில் RC புக் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

வாகனத்தின் உரிமம் மாற்றம் (Vehicle Ownership Transfer) என்பது பைக் அல்லது கார் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சொந்தமானது என்று சான்றிதழ் தருவதாகும். இந்த வாகனத்தின் உரிமையை மற்றொரு புதிய உரிமையாளருக்கு மாற்ற நேரில் சென்று ஒரு சில முறைகள் மூலம் மாற்ற வேண்டும். ஆனால் தற்போது ஆன்லைன் மூலமாகவே வாகன உரிமையை மாற்ற முடியும். இதன் மூலம் ஒருவருடைய பெயரில் இருக்கும் RC புக் வாகனத்தைப் பெறுபவரின் பெயருக்கு மாற்றியமைக்கப்படும்.

 ஆன்லைனில் RC புக்கில் பெயர் மாற்றுவது எப்படி? இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!

உரிமையாளரின் மரணத்தினால் வாகனத்தின் உரிமையை மற்றொரு புதிய உரிமையாளருக்கு மாற்றலாம். வாகனத்தை ஏலத்தில் விற்கும்போது அல்லது வாகனத்தை மறுவிற்பனை செய்யும் பொழுது ஒரு உரிமையாளரிடம் இருந்து மற்றொரு புதிய உரிமையாளருக்கு வாகனத்தின் உரிமம் மாற்றப்படும்.

வாகன உரிமையை மாற்றுவதற்கு தேவையான ஆவணங்கள்:

RC புக்
முகவரி சான்று
புகைப்படம்
பான் கார்டு
காப்பீட்டு சான்று
ஃபார்ம் 28
ஃபார்ம் 29
ஃபார்ம் 30
ஃபார்ம் 31
ஃபார்ம் 35

வாகன உரிமையை மாற்றுவதற்கான செலவு ரூ. 300 முதல் ரூ. 2,000 வரை இருக்கலாம் அல்லது அதற்கும் அதிகமாகவும் இருக்கலாம்.

ஆன்லைனில் RC புக் பெயர் மாற்றம் செய்வது எப்படி?: பரிவஹன் இணையதளம் மூலமாகவும் RC புக்கில் பெயர் மாற்றம் செய்துக்க கொள்ளாலாம். ஒரு வாகனத்தை வாங்கும் நபர் ஆன்லைனில் RC புக் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை சில ஆஃப்லைன் கட்டங்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பரிவஹன் இணையதளத்தைப் பார்வையிட்ட பிறகு பின்பற்ற வேண்டிய படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டெப் 1: "Online Services"என்பதை தேர்ந்தெடுத்து "Vehicle Related Services" என்பதைத் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: உங்கள் வாகனப் பதிவு எண், என்ஜின் நம்பர் ஆகியவற்றை என்டர் செய்து "Proceed" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: இதில் உங்களுடைய விண்ணப்பத்தைத் (TO/CoA/HPA/HPS/HPT/DupRC) தேர்வு செய்யவும்.

ஸ்டெப் 4: உங்கள் மொபைல் நம்பரை என்டர் செய்து "Generate OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 5: OTP-ஐ என்டர் செய்து "See Details" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 6: "Application Selection" என்பதன் கீழ், "Transfer of Ownership" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 7: "Transfer of Ownership Details" என்பதில் புதிய உரிமையாளரைப் பற்றிய தகவல்களை குறிப்பிடவும்.

ஸ்டெப் 8: "Payments" என்பதைத் தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தவும். ஆன்லைனில் கார் உரிமையை மாற்றுவதற்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, இரண்டு கட்டண ரசீதுகள், அத்துடன் படிவம் 29 மற்றும் 30 ஆகியவை உருவாக்கப்படும்.

ஸ்டெப் 9: ஒரு சில நாட்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய வாகன பதிவுச் சான்று கிடைத்துவிடும். இது உங்களுக்கு தபால் மூலம் வந்து சேரும் அல்லது RTO அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வரும்.

குறிப்பு: இந்த செயல்முறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+